Maruti Suzuki-யின் இந்த கார்களில் ரூ.54,000 வரையிலான தள்ளுபடிகள்: பப்மர் சலுகை விவரம் இதோ
நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டிருந்து உங்களுக்கு நல்ல சலுகைகளும் தேவையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தங்கள் கார்களில் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Maruti Car Discount: நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டிருந்து உங்களுக்கு நல்ல சலுகைகளும் தேவையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தங்கள் கார்களில் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
மாருதி சுசுகி (Maruti Suzuki) தனது பல மாடல்களில் இந்த தள்ளுபடியை வழங்குகிறது. இதில் மாருதி ஆல்டோ, செலெரியோ எக்ஸ், எஸ்-பிரஸ்ஸோ, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுசுகி டிசையர் ஆகியவை அடங்கும். இந்த கார்களுக்கு ரூ .10,000 முதல் ரூ .30,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. மொத்தமாக வாடிக்கையாளர்கள் இவற்றின் மூலம் ரூ.54000 வரையிலான தள்ளுப்டையைப் பெறலாம்.
1.Maruti Suzuki Alto
மாருதி தனது பல மாடல்களில் இந்த தள்ளுபடியை வழங்குகிறது. மாருதியின் மலிவான காரான மாருதி சுசுகி ஆல்டோவில் 15 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் பழைய காருக்குப் பதிலாக நீங்கள் அதை வாங்கினால், உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். மாடலைப் பொறுத்து, வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்ற போனஸைப் பெறலாம். இது தவிர, நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறலாம். மாருதி ஆல்டோ 800 காரில் 796 சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட எஞ்சின் மற்றும் அம்சங்களுடன் ஆல்டோ அறிமுகப்படுத்தப்பட்டது.
2.S-Presso
மாருதி தனது Micro SUV S-Presso-விலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ வாங்கும்போது 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி மாடலில் எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. எஸ்-பிரஸ்ஸோவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 68 ஹெச்பி பவரை அளிக்கிறது. எஸ்-பிரீசோ லிட்டருக்கு 21.7 கி.மீ. மைலேஜை அளிக்கிறது.
ALSO READ: கார் வாங்கணுமா? Maruti Suzuki அளிக்கிறது அதிரடியான கார் கடன்கள்: விவரம் உள்ளே
3. Maruti Suzuki Wagon-R
Maruti Suzuki Wagon-R -ல் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், அதன் சி.என்.ஜி மாடலில் தள்ளுபடி இல்லை. Wagon-R -ல் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என்ற இரண்டு இரண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கான தேர்வு கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 68 ஹெச்பி பவரையும், 1.2 லிட்டர் எஞ்சின் 83 ஹெச்பி பவரையும் தருகிறது.
4. Maruti Suzuki Celerio
சில விநியோகஸ்தர்கள் Celerio X-ல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான ரொக்க தள்ளுபடியையும், Celerio-வில் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியையும் வழங்குகிறார்கள். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பரிமாற்ற போனஸாக மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது மேனுவல் மற்றும் ஏ.எம்.டி கியர்பாக்ஸுடன் வருகிறது.
5.Maruti Suzuki Swift
மாருதி நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனையாகும் காரான Maruti Suzuki Swift -ன் Lxi மற்றும் Lxi (O) வகைகளில் ரூ .30 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. சில விநியோகஸ்தர்கள் இந்த காரின் முன்-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.
6. Maruti Suzuki Dzire
மாருதி டிசைரின் சிறந்த டிரிம்களில் எந்த தள்ளுபடியும் இல்லை. ஆனால் காரின் (Cars) அடிப்படை வகைககளுக்கு 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிசையர் நிறுவனத்தின் மிகச்சிறந்த எரிபொருள் திறன் கொண்ட கார் ஆகும். இதில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 90 ஹெச்பி ஆற்றலை வழங்குகிறது.
7. Maruti Vitara Brezza
இது அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி விட்டாரா ப்ரெஸாவின் சிறந்த வகைகளில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை வழங்குகிறது.
ALSO READ: ஹோண்டா கார்கள் மீது சிறப்பு தள்ளுபடி, விலை, அம்சங்கள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR