மாருதி சுசுகி (Maruti Suzuki) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஒரு புதிய மாருதி காரை வாங்கியிருந்தால், கார் இலவச சேவையின் (Maruti Suzuki free service) கடைசி தேதி சமீபத்தில் முடிந்துவிட்டிருந்தால், இப்போது நீங்கள் 2021 ஜூலை 31 வரை கார் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் இதுவரை அதன் பயனை அடையவில்லை என்றால், மாத இறுதி வரை உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் இலவச சேவை மற்றும் முதன்மை மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் தேதியை நீட்டித்துள்ளது.


கொரோனா காலத்தில் வாடிக்கையாளரின் வசதிக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது


முன்னதாக இலவச சேவையின் கடைசி தேதி 30 ஜூன் 2021 வரை இருந்தது. கொரோனா (Coronavirus) காலத்தில் தனது வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் வைத்து நிறுவனம் காலக்கெடுவை நீட்டித்து இந்த முடிவை எடுத்துள்ளது. 


வாடிக்கையாளர்கள் இலவச சேவையை எவ்வாறு பெறுவது 


உங்கள் காரின் (Car) இலவச சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமானது 15 மார்ச் 2021 முதல் 30 ஜூன் 2021-க்குள் காலாவதியாகிவிட்டால், இந்த நீட்டிக்கப்பட்ட சேவையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ALSO READ: Maruti Suzuki கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி


காரின் முழு செக்-அப் நடக்கும் 


உங்கள் காரின் இலவச சேவையின் தேதி காலாவதியாகிவிட்டால், மேலே குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் வந்தால், நீங்கள் காரை சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதன் கீழ், உங்கள் காரின் முழுமையான செக்-அப் கிடைக்கும். நிறுவனம் லேபர் சார்ஜிலும் சலுகை அளிக்கின்றது. கூடுதலாக இலவச டாப் வாஷும் வழங்கப்படுகிறது. 


இலவச சேவையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்


நீங்கள் விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.marutisuzuki.com/-க்குச் சென்று கார் சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். 


பல நிறுவனங்கள் காலக்கெடுவை அதிகரித்துள்ளன


வோக்ஸ்வாகன் இந்தியா, நிசான் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ், ஹோண்டா கோர்ஸ் இந்தியா மற்றும் ஹூண்டாய் ஆகியவை கார்களுக்கான இலவச சேவை மற்றும் உத்தரவாத காலத்தை நீட்டித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்காது. 


ALSO READ: Maruti Suzuki-யின் இந்த கார்களில் ரூ.54,000 வரையிலான தள்ளுபடிகள்: பப்மர் சலுகை விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR