7th Pay Commission: வந்தது நல்ல செய்தி... 46% டிஏ ஹைக் உறுதி, AICPI குறியீட்டில் ஏற்றம்
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்து விட்டது.
7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்து விட்டது. நேற்று ஜூன் மாத ஏஐசிபிஐ எண்கள் வெளியாகிவிட்டன. இதன் பிறகு ஜூலை 2023 முதலான அகவிலைப்படி உயர்வு 46 சதவிகிதம் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. இது ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.
நேற்று ஜூன் 2023 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூன் ஏஐபிசிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம்
ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளை எட்டியுள்ளது. மே மாதத்தில் குறியீட்டு எண் 134.7 புள்ளிகளாக இருந்தது. ஜூன் மாதத்தில் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரித்துள்ளன. மே மாத புள்ளிவிவரங்களின்படி, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு செப்டம்பர் மாதத்தில் வெளியிடக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஏ உயர்வு 1 ஜூலை 2023 முதல் அமலுக்கு வரும்
புதிய அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வரும் வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படியே வழங்கப்படும். இருப்பினும், அறிவிப்பு வெளியான பிறகு அடுத்த மாத ஊதியத்துடன் ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி உயர்வின் அரியர் தொகையும் சேர்த்து அளிக்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வின் பலன் 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வின் பலன் நேரடியாக வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கட்டணங்கள் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்
அகவிலைப்படி உயர்வு இருமுறை வழங்கப்படுகிறது
அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் அதை அங்கீகரிக்கிறது. மேலும் தொழில்துறை பணவீக்க புள்ளிவிவரங்களுடன் (AICPI) இணைத்து தொழிலாளர் அமைச்சகம் இதை தீர்மானிக்கின்றது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் அகவிலைப்படி உயர்வுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிகள் ஆகும். ஆனால், வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இந்த அகவிலைப்படி உயர்வானது, மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியை எதிர்கொள்ள அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.
இந்த அரையாண்டில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்துள்ளது
ஜூலை 2023 இல் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் ஜூலை 2021 முதல், டிஏ -வில் மொத்தம் 15 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஜூலை 2021 இல், ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படி அதாவது டிஏ ஒரே நேரத்தில் 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூலை 2021 இல் 3 சதவீதமும், ஜனவரி 2022 இல் 3 சதவீதமும், ஜூலை 2022 இல் 4 சதவீதமும், பின்னர் 2023 ஜனவரியில் 4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்போது ஜூலை 2023 இல், மீண்டும் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி இப்போது 46 சதவீதத்தை எட்டும். 2021 -ல் இருந்து கணக்கீடு செய்தால், ஒன்றரை வருடத்தில் அகவிலைப்படி சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! டிஏ உயர்வு... இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ