8வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது. கரோனா காலத்தைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி இரண்டு முறை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில் அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இதனால் அவர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது கைக்கு வரும் சம்பளம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக டிஏ உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
மிக விரைவில் இந்த நல்ல செய்தியும் ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளது. இதற்கிடையில், எட்டாவது ஊதியக் குழுவுக்கான புதுப்பிப்பும் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது. எட்டாவது ஊதியக்குழுவை அரசு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கலாம்
அரசாங்கம் ஜீலை 2023 -க்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இது நடந்தால், ஊழியர்களின் டிஏ 46 சதவீதத்தை எட்டும். தற்போது டிஏ 42 சதவீதமாக உள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50 சதவீதத்தை எட்டும். இது நடந்தால் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை கொண்டு வருமா என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு சமீபத்தில் பதில் அளித்துள்ளது.
எட்டாவது ஊதியக் குழுவை அரசு கொண்டு வருமா?
8 ஆவது ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சமீபத்தில் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது தங்களிடம் இல்லை என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனை தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இப்போது அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது
அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி முதல் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்திற்கு பொருந்தும். மேலும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நடந்தால், டிஏ 46 சதவீதத்தை எட்டும். மேலும், அடுத்த ஆண்டு டிஏ 50 சதவீதத்தை எட்டலாம். 8வது ஊதியக் குழு விவகாரத்தில் மத்திய அரசு தன் முடிவை தெரிவித்து விட்டது என்றே கூறலாம்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது
2013 இல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அடுத்த ஊதியக்குழு அமைக்கப்படும் என ஊழியர்கள் காத்திருந்தனர். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக உயரக்கூடும்
8 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு, அரசு அதை பழைய ஊதியக்குழுவின் அடிப்படையிலேயே அமைத்தால், அப்போது ஊதியத்தின் அடிப்படை ஃபிட்மெண்ட் பேக்டராக இருக்கும். இதனடிப்படையில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்படலாம். இதன் பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 44.44 சதவீதம் உயர்வு இருக்கும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ