பொதுமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உண்மையில், ஒவ்வொரு நபரும் ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்க்கை பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது, அதேபோல் தங்களின் அன்றாட செலவுகளுக்கு யாரையும் சார்ந்திருக்க இருக்க கூடாது என்பதையும் உறுதிக்கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வூதியம் என்பது முதுமையின் தடி:
இந்நிலையில் இதற்காக, பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஆரம்பத்திலிருந்தே ஓய்வூதியம் உள்ளிட்ட பிற நிதிகளில் முதலீடு செய்யத் தொடங்குகின்றனர். அந்த வகையில் மக்களின் இந்தத் தேவைகளை மனதில் வைத்து, இந்திய அரசு உட்பட பல தனியார் நிதி நிறுவனங்களும் பல்வேறு வகையான பாலிசிகளை நடத்தி வருகின்றன, மேலும் இந்தக் பாலிசிகள் முதுமை காலத்தில் மக்களுக்கு ஆதரவாகவும் மாறி வருகின்றன.


மேலும் படிக்க | இன்னும் 3 நாட்கள் தான்! அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதிகள்!


வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகை அதிகரிக்கத் தொடங்குகிறது:
உண்மையில் ஓய்வூதியத் திட்டம் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக, மக்கள் பொதுவாக 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். இதற்குப் பிறகு, வயது ஏற - ஏற மக்களின், முதலீட்டின் அளவு அதாவது பிரீமியமும் அதிகரிக்கத் தொடங்குகிறது.


மாதாந்திர ஓய்வூதியத்திற்கான முதலீட்டுத் தொகை 25,000:
ஒரு நபரின் வயது சுமார் 57 ஆக இருந்தால், அவர் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார். பொதுவாக, அனைத்து ஓய்வூதிய திட்டங்களிலும், ஓய்வூதியம் 60 வயதில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கணக்கீட்டின்படி, நீங்கள் மாதம் ரூ.25,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 60 வயதில் அதாவது முதிர்ச்சி அடையும் போது, ​​நீங்கள் என்பிஎஸ் உள்ளிட்ட பிற திட்டங்களில் தோராயமாக ரூ.53 முதல் 54 லட்சம் வரை டெபாசிட் செய்திருக்க வேண்டும். அதாவது ஆண்டுக்கு ரூ.18 லட்சம் அல்லது மாதம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்.


மூத்தக் குடிமக்களுக்கு முத்தான 6 திட்டங்கள்:


* அடல் பென்சன் யோஜனா: இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 5 வகையான ஒய்வூதிய படிநிலைகள் உள்ளன. 60 வயதுக்கு பிறகு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒய்வூதியம் கிடைக்கும்.


* தேசிய ஓய்வூதிய திட்டம்: இந்த திட்டமானது PFRDA ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பின் நிதிப் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


* எல்ஐசி பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா: இதில் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் ரூ.12 ஆயிரமும், காலாண்டுக்கு ரூ.3 ஆயிரமும், அரையாண்டுக்கு ரூ.6 ஆயிரமும், மாதம் ரூ.1000மும் ஓய்வூதியம் பெறலாம்.


* வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா (VPBY): வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (எல்ஐசி) வழங்கப்படும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 9 சதவீதம் வரை ஆண்டு வட்டி வழங்கப்படும்.


* தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP): இந்த திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் NSAP வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு ₹200 முதல் Rs500 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.


* இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS): மாதந்தோறும் ₹200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் மாதம் ₹500 ஆக உயரும்.


மேலும் படிக்க | PPF கணக்கில் உள்ள உங்கள் பணத்தை எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ