புதுடில்லி: அடுத்த மாதம் உங்கள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என நீங்கள் காத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த ஆண்டு குறைந்த சம்பளம் உயர்வு தான் இருக்கும் என்ற கவலையை விட்டுவிடுங்கள். சமீபத்திய ஆய்வில், இந்த ஆண்டு பிரைவேட் துறையில் வேலை செய்பவர்களுக்கு 40 சதவீதம் வரை சம்பள உயர்வு (Salary Hike) பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், போனஸ் மற்றும் இன்கிரெமென்ட் அதிகரிப்புக்கான வாய்ப்புகளும் அதிகம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பளம் 30-40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு:
இந்த ஆண்டு சம்பள உயர்வு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ஒரு தனியார் வேலை தளம் கூறுகிறது. இந்த ஆண்டு தனியார் துறைகள் சிறந்த சம்பள உயர்வை வழங்க முடியும் என்று தனது சமீபத்திய அறிக்கையில் நிறுவனம் கூறியுள்ளது. நடுத்தர பதவிகளில் பணிபுரிபவர்கள் 20-30 சதவீதம் சம்பள உயர்வு பெறலாம். ஆனால் இதைவிட சிறந்த செய்தி என்னவென்றால், மூத்த மட்டத்தில் பணிபுரியும் நபர்கள் 40 சதவீதம் வரை சம்பள அதிகரிப்பை பெறலாம்.


இந்த துறைகளில் தான் அதிக உயர்வு இருக்கும்:
நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள மனிதவள (Ministry of Human Resource Development) அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கூறப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் (Information technology in India) அதிரடியான சம்பள அதிகரிப்பு இந்த ஆண்டு நடக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. இது தவிர, ஊடகங்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளிலும் அதிக அளவில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைகளில் ஊழியர்கள் 10% க்கும் அதிகமான சம்பள உயர்வைப் பெறலாம்.


எந்த நகரங்களில் சம்பள உயர்வு அதிகமாக இருக்கும்:
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் பணிபுரியும் ஊழியர்கள் நல்ல சம்பளத்தை எதிர்பார்க்க வேண்டும் என்று புதிய அறிக்கை கூறியுள்ளதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். பெங்களூர், குருகிராம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பணிபுரியும் IIT துறை ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும்.