நியூயார்க்: மெக்டொனால்ட் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஸ்டீவ் ஈஸ்ட்புரூக்கை நீக்கியதாக அமெரிக்காவின் மெக்டொனால்ட் துரித உணவு நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தரப்பில், அவருக்கு பழக்கம் இல்லாத ஊழியருடன் தலைமை நிர்வாக அதிகாரி காதல் செய்ததாக தெரிவித்துள்ளது. அதாவது நிறுவனத்தின் விதிப்படி, ஸ்டீவ் ஈஸ்ட்புரூக், அன்னிய ஊழியருடன் காதல் கொண்டது விதிமீறிய செயலாகும். ஏற்கனவே கம்பனி நடைமுறை விதிகளில், ஊழியர்கள் யாரும் மற்ற ஊழியருடன் காதல் கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் ஸ்டீவ் ஈஸ்ட்புரூக் நீக்கப்பட்டு உள்ளார் என விளக்கம் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈஸ்டர் ப்ரூக், தனது காதல் உறவை குறித்து ஒப்புக்கொண்டு, தவறு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு ஒரு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் "நிறுவனத்தின் கொள்கைகளைப் பார்க்கும்போது, நான் செய்தது தவறு தான். நான் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


ஈஸ்டர் ப்ரூக் (வயது 52) நீக்கப்பட்ட பின்னர், மெக்டொனால்ட் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கிறிஸ் காம்ப்சின்ஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார்.