பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. வங்கி துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிடங்கள்:


பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


மருத்துவ ஆலோசகர் கல்வி தகுதி:


விண்ணப்பதாரர், இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையில் குறைந்தபட்சம் மருத்துவ பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சியாளராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கியின் மருந்தகங்களில் இருந்து 15 கிமீ சுற்றளவில் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், சில சமயங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்களின் தகுதி தரங்களை வங்கி உயர்த்தலாம்.


மேலும் படிக்க | இந்த வங்கியில் கணக்கு இருக்கா? அமேசானில் ஆபர்களை அள்ளலாம்!


தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைக்கப்படுவார்கள். வங்கியின் மருத்துவ ஆலோசகராக (BMC) வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். அத்தகைய மருத்துவப் பரிசோதனைகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://bankofindia.co.in/pdf/ADV_FOR_MEDICAL_CONSULTANT.pdf என்ற தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.09.2022 மாலை 5 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு


மேலும் படிக்க | Train ticket Booking: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata