7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: பருவமழை காலமான இந்த நேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. இந்த வேளையில் மத்திய அரசு ஊழியர்கள் மீதும் பண மழை பெய்யவுள்ளது. ஆம்!! மிக விரைவில் அவர்களுக்கு பல நல்ல செய்திகள் வரவுள்ளன. மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியின் புதிய எண் இந்த மாத இறுதியில் தெரியவரும். மாதா மாதம் இந்த எண் வெளிவரும் என்றாலும், இந்த மாதம் வரும் ஏஐசிபிஐ தரவு எண் மிக முக்கியமானது. ஏனெனில் இதன் மூலம்தான், ஜுலை முதலான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது இறுதி செய்யப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜூலை 31 ஆம் தேதி ஜூன் மாத ஏஐசிபிஐ எண்கள் வந்தவுடன், ஜூலை 1, 2023 முதல் அகவிலைப்படியில் எவ்வளவு அதிகரிப்பு ஏற்படும் என்பது தெரியவரும். அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான இறுதி எண்ணாக இது இருக்கும். இதுவரை, இந்த அரையாண்டுக்கு, அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை வந்துள்ள புள்ளிவிவரங்களில் இருந்து, டிஏ உயர்வு 4 சதவீம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த உயர்வு இருக்கும்.


அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்


மார்ச் 2023 இல், அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியது. அப்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இப்போது அடுத்த திருத்தம் ஜூலை 2023 முதல் செய்யப்பட உள்ளது. ஆனால், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அகவிலைப்படியின் திருத்தம் ஏஐசிபிஐ குறியீட்டைப் பொறுத்தது. இந்த குறியீடு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதே அளவு வேகமாக அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. இதுவரை ஜனவரி 2023 முதல் மே 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: 46% டிஏ ஹைக், அரியர் தொகையுடன் கிடைக்கும் அதிக சம்பளம்!!


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?


மே 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, அகவிலைப்படி 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு 134.7 புள்ளிகளில் உள்ளது. இதில் 0.50 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. ஆனால், ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் அதிகரிக்காவிட்டாலும் அல்லது குறியீட்டில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டாலும் கூட, ஜூலை 2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படியானது மொத்த எண்ணிக்கையில் (ரவுண்ட் ஃபிகர்) செலுத்தப்படுகிறது. குறியீட்டு எண் 45.50 ஆக இருந்திருந்தால், அகவிலைப்படி 45 சதவீதம் அதிகரித்திருக்கும். ஆனால், மே மாதத்திலேயே குறியீடு 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆகையால் அகவிலைப்படி குறைந்தது 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இறுதி எண் ஜூலை 31 அன்று வரும்


ஜூன் 2023க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் ஜூலை 31 மாலை வரும். இவையே இந்த அரையாண்டுக்கான கடைசி எண்களாக இருக்கும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்கின்றன. அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. ஜனவரி முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி ஜூலை முதல் டிசம்பர் வரையிலான எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.


46% டிஏ உயர்வு இருக்கும் என்பது டிரெண்டிலிருந்து தெளிவாகிறது


7வது ஊதியக் குழுவின் படி, 2023 ஜூலையில் அகவிலைப்படி (DA) 4 சதவீதம் அதிகரிக்கும். கடந்த 5 மாதங்களின் போக்கு இதை உறுதிப்படுத்துகிறது. விலை குறியீட்டு விகிதத்தின்படி, ஒவ்வொரு மாதமும் 0.65 புள்ளிகள் அதிகரிக்க வேண்டும். இந்தப் போக்கைப் பார்த்தால், ஜனவரியில் 43.08 சதவீதமாக இருந்த எண்ணிக்கை 46.39 சதவீதமாக அதிகரிக்கலாம். ஆனால், அந்த அளவுக்கு அதிகரிக்காவிட்டாலும், மே மாத குறியீட்டின்படி, மதிப்பெண் 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. இதிலிருந்து டிஏ உயர்வு 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... 3 பெரிய குட் நியூஸ்!! DA, HRA மட்டுமல்ல, இதுவும் உயரும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ