Love Home: மனைவிக்கு காதல் பரிசாக சுழலும் வீட்டை உருவாக்கிய 72 வயது கணவர்
நவீன யுகத்தில் 72 வயது காதலன் தனது காதல் மனைவிக்காக சுழலும் வீடு ஒன்றை கட்டி பரிசளித்திருக்கிறார்
மனைவிக்காக காதல் மாளிகையை கட்டியவர் என்றால் முகலாய மன்னர் ஷாஜகானும், அவருடைய மனைவி மும்தாஜும், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலும் தான் அனைவரின் நினைவுக்கு வரும்.
காதல் என்பது காலத்திற்குள் அடங்குவதும் இல்லை, நூற்றாண்டுகள் கடந்தாலும், மனிதர்கள் இறந்தாலும், வீழ்ந்தாலும், மாண்டாலும், வாழ்ந்தாலும் காதல் மட்டும் என்றும் என்றென்றும் உலகில் நிலைத்து வாழ்கிறது.
நினைவுச்சின்னங்கள் பல இருந்தாலும், அதன் அஸ்திவாரம் காதல் மட்டுமே.... மாமன்னர் ஷாஜகானைத் தவிர பலர் தங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ காதல் சின்னத்தை உருவாக்கியிருக்கின்றனர். அதில் சில காதல் நினைவிடங்கள் உலகிற்கு வெட்டவெளிச்சமாய் தெரிந்தாலும், பல காதலைப் போலவே அவையும் உருவிலியாக இருக்கின்றன.
Read Also | லைலா-மஜ்னுவுக்கு குறையாத இந்த காகம் காதல் ஜோடியை பாருங்கள்..!!
இப்போது, வடக்கு போஸ்னியாவில் ஒரு காதலன் தனது மனைவிக்காக சுழலும் வீடு ஒன்றை கட்டி பரிசளித்திருக்கிறார். இவர் தனது மனைவியுடன் இந்த காதல் சின்னத்தில் வாழ்ந்து வருகிறார். காதல் சுற்றும் அந்த சுழலும் வீட்டில் காதல் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இந்த செய்தி வைரலாகிறது.
இந்த காதல் மாளிகையை ஸ்ரபக் (Srbac) நகரில் 72 வயதான வோஜின் குசிக் வடிவமைத்தார். வீடு பச்சை முகப்புடனும், அதன் கூரை சிவப்பு உலோகத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல்களுக்கு வெளியே பார்க்க விரும்பும் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அன்புக் கணவன் அதை சுழல் வீடாக மாற்றியுள்ளார்.
"எனக்கு வயதான பிறகு, என் பிள்ளைகள் குடும்பத் தொழிலை செய்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. அதனால், என் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைத்தது" என்று காதலுடன் சொல்கிறர் கணவர். மனைவி விரும்பும் போதெல்லாம் தனது வீட்டில் அறைகளின் நிலையை மாற்றிக் கொள்ள முடியும் என்று வோஜின் குசிக் (Vojin Kusic) கூறினார்.
Read Also | தன் காதல் மனைவி பெயரை பச்சைக் குத்திக்கொண்ட கவிஞர் சினேகன்
வோஜின் குசிக் திருமணம் செய்துக் கொண்டபோது, அவர் தனக்கும் அவரது மனைவிக்கும் வழக்கமான வீட்டைக் கட்டினார், அந்த வீட்டில் தான் அவர்கள் தங்களது மூன்று குழந்தைகளை வளர்த்தனர். தங்கள் படுக்கையறைகளின் சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்று மனைவி விரும்பியதால் அதற்கேற்ப வீட்டைக் கட்டினார்கள். ஆனால் வீட்டின் வரவேற்பரையில் இருந்து சாலையை பார்க்க முடியவில்லை. எனவே, மனைவியின் விருப்பப்படி குசிக் வீட்டை மீண்டும் மறுவடிவமைப்பு செய்தார்.
"எங்கள் இரண்டு படுக்கையறைகளுக்கு இடையில் உள்ள சுவரை வரவேற்பரையாக மாற்றி அனைத்து மின் நிறுவல்களையும் நகர்த்த வேண்டும். அது சவாலான வேலை. என் மனைவிக்காக அவள் விரும்பிவாறு வீட்டை மறுவடிவமைத்தேன்” என்று சொல்கிறார் 72 வயது காதல் கணவர்.
"இப்போது, எங்கள் வீடு சுழல்வதால், தேவையற்ற விருந்தினர்கள் வந்தால், வீட்டை சுழற்றி அவர்களுக்கு வாசல் தெரியாமல் செய்யலாம்" என்று குறும்புடன் சொல்லும் இந்த காதல் கணவர் கல்லூரிக்குச் செல்லாதவர் என்பது ஆச்சரியமானது.
மின்சார மோட்டார் மற்றும் ஒரு பழைய ராணுவப் போக்குவரத்து வாகனத்தின் சக்கரங்களைப் பயன்படுத்தி, தனது சுழலும் வீட்டை அவரே வடிவமைத்து கட்டியிருக்கிறார். காதல் என்ன செய்யும்? மனைவியானாலும் அவரை சுற்றி வரச் செய்யும், காதல் சின்னத்தை உருவாக்கவும் செய்யும் என்பது காலம் தாண்டி நிற்கும் உண்மை...
Read Also | அந்நாள் பாலிவுட் நடிகைகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் கிசுகிசுக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR