நீங்கள் இது வரை லைலா-மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற பிரபலமான காதல் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு காகங்களின் காதல் கதையை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜார்ஜ் மற்றும் மேபெல் காகங்கள் என்ற இரண்டு காகங்களின் காதல் கதை உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
நீங்கள் இது வரை லைலா-மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற பிரபலமான காதல் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு காகங்களின் காதல் கதையை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜார்ஜ் மற்றும் மேபெல் காகங்கள் என்ற இரண்டு காகங்களின் காதல் கதை உங்களை வியப்பில் ஆழ்த்தும்
நாம் திரைப்படங்களில், காதல் ஜோடியில் ருவர் விபத்துக்கு உள்ளான பிறகு, மற்றவர் அவரை கவனித்து கொள்வதை பார்த்திருக்கலாம். அதே போன்று ஜார்ஜ் மற்றும் மாபெல் (George and Mabel Crows' Love Story) என்ற இரண்டு காகங்களின் காதல் கதையும் மனிதர்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது.
ஜார்ஜ் மற்றும் மாபெல் 12 ஆண்டுகளாக பிரியாமல் உள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு காரில் மோதியதில் மாபெலின் அலகு உடைந்தது. இதன் காரணமாக, அதனால் உணவை உண்ண முடியாது. அதனால் ஜார்ஜ் அதனை விட்டு போகமால், தனது கொக்கினால் மாபலுக்கு உணவளிக்கிறது.
ஜார்ஜ் தனது குடும்பத்திற்காக உணவு சேகரிக்கும் போது, மாபெல் தூரத்தில் உள்ள ஒரு கட்டிடம் அல்லது மரத்திலிருந்து கண்காணிக்கிறார். அபாயம் ஏதேனும் இருப்பதாக உணர்ந்தால், மாபெல் ஜார்ஜுக்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது.
உடைந்த அலகு காரணமாக, மாபெல் மிகவும் சிக்கலான வாழ்க்கையை நடத்தி வருகிறார். உணவை சேகரிக்கவும் முடியாது. சாப்பிடுவதிலும் பெரும் சிக்கல். பெரும்பாலும் ஜார்ஜ் தனது அலகினால், மபெல் காகத்திற்கு ஊட்டுகிறது
ஜார்ஜ் மற்றும் மாபெலின் காதல் கதை மனிதர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நாமும் கடினமான காலங்களில் கைவிடாமல், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்