ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த உலக கோப்பை முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய அணி பைனல் போட்டியில் படு தோல்வி அடைந்தது.  9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரைஇறுதியில் நியூஸிலாந்து அணியை வென்று பைனலுக்கு முன்னேறியது.  அகமதாபாத்தில் நடைபெற்ற பைனல் போட்டியில், பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தினர். இரு அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இருப்பினும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது அணியை சிறப்பாக வழிநடித்தி கோப்பையை வாங்கி தந்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இமாலய ரன்கள் முதல் அதிக கேட்ச்கள் வரை... உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள்!


இந்த உலக கோப்பை முழுவதும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.  அதிலும் குறிப்பாக முகமது ஷமி சிறப்பான விளையாடினார்.  முன்னதாக, ஆரம்ப போட்டிகளில் முகமது ஷமி அணியில் விளையாடவில்லை.  அவருக்கு பதிலாக தாகூர் அணியில் சேர்க்கப்பட்டார்.  இருப்பினும், அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.  மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார்.  அணியில் வந்த உடனேயே தனது திறமையை காட்டி வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.  2023 ஐசிசி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார் ஷமி. ஷமி இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்.


முகமது ஷமி கிரிக்கெட் மற்றும் பிராண்ட் அங்கீகாரம் மூலம் நிறைய வருமானம் சம்பாதித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஷமி தற்போது பிசிசிஐயுடன் கிரேடு ஏ ஒப்பந்தத்தில் உள்ளார், மேலும் பிசிசிஐ-யில் இருந்து ஆண்டுக்கு ரூ.5 கோடி மட்டும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வெளி லீக்குகள் மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களிடமிருந்தும் பணம் சம்பாதிக்கிறார். வெளியான தகவல்களின் படி, ஷமிக்கு 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் ரூ. 6.25 கோடி ஊதியமாக வழங்கி உள்ளது.  பிளிட்ஸ்பூல்ஸ், நைக், ஆக்டாஎஃப்எக்ஸ் போன்ற பிராண்டுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.  எல்லா வழிகளில் இருந்தும், ஷமி அதிக பணம் சம்பாதிக்கிறார். அவரது நிகர மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


முகமது ஷமிக்கு உத்தரபிரசேஷின் அம்ரோஹாவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீடு 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, மேலும் இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பண்ணை வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.  இதனை கடந்த 2015 ஆம் ஆண்டில் வாங்கியதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ. 12-15 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  ஷமி ஆடம்பர கார்கள் பிரியராக  உள்ளார். சில சிறந்த பிராண்ட் கார்களை வைத்திருக்கிறார்.  ஜாகுவார் எஃப் வகை (ரூ 99 லட்சம்), BMW 5 சீரிஸ் (ரூ. 65-69 லட்சம்), ஆடி (ரூ 43 லட்சம்), ஃபார்ச்சூனர் (ரூ 33 லட்சம்) ஆகிய கார்களை வைத்துள்ளார்.


மேலும் படிக்க | இதெல்லாம் ரொம்ப ஓவர்... உலகக் கோப்பையை வைத்து அத்துமீறும் ஆஸ்திரேலியா - புது சர்ச்சை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ