இதெல்லாம் ரொம்ப ஓவர்... உலகக் கோப்பையை வைத்து அத்துமீறும் ஆஸ்திரேலியா - புது சர்ச்சை!

Australia Men's Cricket Team: இறுதிப்போட்டியில் வென்று பின் நடந்த கொண்டாட்டத்தின்போது உலகக் கோப்பையை வைத்து மிட்செல் மார்ஷ் செய்த செயல் தற்போது நெட்டிசன்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2023, 01:29 PM IST
  • ஆஸ்திரேலியா இதோடு 6ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
  • ஒருமுறை டி20 உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.
  • 2 முறை சாம்பியன்ஸ் டிராபி, ஒருமுறை WTC கோப்பையையும் வென்றுள்ளது.
இதெல்லாம் ரொம்ப ஓவர்... உலகக் கோப்பையை வைத்து அத்துமீறும் ஆஸ்திரேலியா - புது சர்ச்சை! title=

Australia Men's Cricket Team: நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரை (ICC World Cup 2023) வென்று ஆஸ்திரேலிய அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும். 1987, 1999, 2003, 2007, 2015 என இதற்கு முன் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய ஆடவர் அணி வென்றிருக்கும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் இது அவர்களின் ஆறாவது உலகக் கோப்பை பட்டமாகும். 

அந்த வகையில் ஒருநாள் அரங்கில் மகளிர் உலகக் கோப்பைகளில் 7 முறை ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணியின் சாதனையை ஆஸ்திரேலிய ஆடவர் அணி சமன் செய்ய இன்னும் ஒரு கோப்பை தேவையாகும். மேலும், ஆஸ்திரேலிய ஆடவர் இதற்கு முன் 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் வென்றிருந்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மகளிர் அணியோ டி20 உலகக் கோப்பையிலும் 6 முறை கோப்பையை வென்றிருக்கிறது. 

இது போக, ஆஸ்திரேலிய ஆடவர் அணி இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும், இந்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. இத்தனை பட்டங்களை வென்றிருப்பதன் மூலமே ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் உலக கிரிக்கெட்டில் செலுத்தியுள்ள ஆதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க | இவங்க ஜோசியமே பொய்... கணிப்பு தெரிவித்த பிரபல ஜோதிடர்களை போட்டுத்தாக்கும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியர்கள் என்றாலே உளவியல் ரீதியிலும் களத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதற்கு நேற்றைய உலகக் கோப்பை இறுதிப்போட்டியும் ஒரு சான்றாக அமைந்தது. அதாவது, 1.30 லட்சம் பார்வையாளர்களும் இந்தியாவுக்கு தங்களின் ஆதரவுகளை அளித்துக்கொண்டிருக்க அவர்களை அமைதியாக்குவதே எங்களின் நோக்கம் என்றார், பாட் கம்மின்ஸ். அதை நேற்று செய்தும் காட்டினார் அவர். 

இதெல்லாம் ஒரு புறம் இருக்க அவர்களின் மேல் பல புகார்களையும் நாம் காண நேரிடும். அந்த வகையில், நேற்று உலகக் கோப்பையை வென்ற உடன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Mitchel Marsh

கம்மின்ஸ் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் உலகக் கோப்பை உடன் மிட்செல் இருக்கிறார், அதில் மார்ஷ் தனது இரண்டு கால்களையும் உலகக் கோப்பை மீது வைத்திருந்தார். மேலும், ஒரு கையில் பீர் பாட்டிலுடனும் கழுத்தில் தங்கப் பதக்கத்தையும் அவர் அணிந்திருந்தார். இதில் உலகக் கோப்பையின் மீது கால்களை வைத்திருந்தது மரியாதை குறைவான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி அதனை தன்னுடன் வைத்துக்கொண்டு உறங்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு மிட்செல் மார்ஷை (Mitchell Marsh) திட்டி வருகின்றனர்.

ஆனால், இதுபோன்ற சர்ச்சைகளும், வினோதமான கொண்டாட்டங்களும் ஆஸ்திரேலிய அணிக்கு புதிதல்ல. அவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்ற பின் நடந்த கொண்டாட்டத்தின்போது, ஷூவில் பீர் ஊற்றிக் குடித்த சம்பவம் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இனி இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை... இறுதிப்போட்டிக்கு பின் எதிர்காலம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News