புதுடெல்லியில் திரண்ட 1000-க்கு மேற்பட்ட LGBTQ சமூகத்தினர்...
LGBTQ சமூகத்தின் 1,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களுடன் இந்தியாவின் பாலியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காக புதுடெல்லியில் அணிவகுப்பு நடத்தினர்.
LGBTQ சமூகத்தின் 1,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களுடன் இந்தியாவின் பாலியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காக புதுடெல்லியில் அணிவகுப்பு நடத்தினர்.
இந்தியாவில் LGBTQ மீதான பார்வை முன்னேறி வருவதாகக் கூறினாலும், இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடமாக மாற இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தங்களது உரிமைகளை கொண்டாடும் விதமாக இன்று புதுடெல்லியில் 1000-க்கும் மேற்பட்ட LGBTQ சமூபத்தினர் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
வானவில் கொடிகள், பலூன்கள் மற்றும் பலகைகளை எடுத்துச் சென்று டிரம்ஸின் துடிப்புக்கு நடனமாடிய அவர்கள், முதலில் ஒரு திருநங்கையாக பதிவு செய்வதை விட சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்காக எந்தவொரு பாலினத்திலும் சுய அடையாளம் காண வேண்டும் என்றும் பின்னர் அரசாங்க மசோதா பரிந்துரைத்தபடி அதிகாரிகளுக்கு அறுவை சிகிச்சை ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த மசோதா, இந்தியாவின் பாராளுமன்றத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை, எனினும் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் LGBTQ சமூகதிற்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பு இதற்கான அடிதளமாய் இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது சட்டரீதியாக குற்றமாகவும், 10 ஆண்டுகள் வரை அதற்கு தண்டனை விதிக்கப்படும் எனவும் இருந்துவந்த நிலையில் அதனை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது இந்தியாவில் LGBTQ நிலையை குறித்து 21 வயதான ஜாரா தெரிவிக்கையில், “ஏற்றுக்கொள்ளலும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லை. சட்டம் மட்டுமே மாறியுள்ளது. ஆனால் வீட்டிலுள்ள சட்டங்கள் மாறும் வரை, நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.
LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வருடாந்திர அணிவகுப்பில் தங்களை தைரியமாக வெளிப்படுத்திக் கொள்ள உரிமை வேண்டும் என அலி அகமது பராஸ் என்னும் நபர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த சமூகத்தில் நாங்களும் இருக்கிறோம் என உறக்க சொல்ல வேண்டும்" என தெரிவித்த அவர்., "எங்களைச் சுற்றியுள்ளவர்களை பற்றி நீங்கள் அறிவீர்கள், அது காவல்துறையாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எங்களை மோசமான கண்னோட்டத்தில் தான் பார்க்கிறார்கள்," LGBTQ என்ற ஒரு சமூகம் உள்ளது என அவர்களும் மணிதர்கள் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்" என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.