மற்றவர்களது மகிழ்ச்சி, வெற்றியை பார்த்து பொறாமைப்படும் ராசிகள் இவைதான்
Astrology: ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசிக்காரர்களுக்கு அதிகமாக பொறாமைப்படும் தீய பழக்கம் உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராசிகளும் இயல்புகளும்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ராசியின் மூலம், அவரது இயல்பு, ஆளுமை எதிர்காலம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ராசிகளின் அடிப்படையில் மக்களின் பல வித குணாதிசயங்களை நாம் காண்கிறோம்.
அதன்படி மற்றவர்களின் மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் தாங்க முடியாத சில ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். அபார வெற்றிகளை காணும் நபர்கள் மீது இவர்கள் பொறாமப்படுவதுண்டு. ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசிக்காரர்களுக்கு இந்த தீய பழக்கம் உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பெரிய லட்சியம் கொண்டவர்கள். தாங்கள் செய்யும் வேலையில் முன்னோக்கி இருக்க விரும்புவார்கள். இவர்களின் இந்த பழக்கம் இவர்களுக்கு வெற்றியை அளிக்கிறது. ஆனால் அவர்கள் ஒருவரை விட பின்தங்கியிருந்தால், அதை அவர்களால் தாங்க முடியாது. இவர்கள் மற்றவர்கள் தங்களை விட முன்னேறிச் செல்வதைக் கண்டு பொறாமை கொள்ளும் இயல்புடையவர்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள். அவர்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுகிறார்கள். என்னும், இதற்காக இவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். ஆகையால், கடின உழைப்பு முழு பலனைத் தராதபோது, மற்றவர்கள் வேகமாக வெற்றி பெறுவதைக் கண்டு, அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவதுண்டு. எனினும், இவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பிறர் இவர்களிடம் ஏதாவது உதவி கேட்டால் இவர்கள் அதை மறுப்பதில்லை.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அபாய காலம், இவற்றை செய்தால் நிவாரணம் பெறலாம்
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தமக்கு முன்னால் இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயங்களில் அவர்களைப் பற்றி தவறாக நினைக்கவும் தயங்க மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களாலும் மற்றவர்களின் மகிழ்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாது. மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அவர்கள் மீது பொறாமை கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்களை பின்னுக்கு இழுக்க பல தந்திரங்களையும் செய்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் பாதுகாப்பில்லாத உணர்வு அவர்களை பாடாய் படுத்துகிறது. இதனால் அவர்கள் பிறரை பார்த்து பொறாமைப்படத் தொடங்குகிறார்கள். பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்குகிறார்கள். அதேசமயம் கும்ப ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தால் கடின உழைப்பாளிகளாகவும் இருந்து வெற்றியைப் பெறுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது உஷாராக இருக்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR