ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் பழக்க வழக்கங்களும் வெவ்வேறாக இருக்கும். ராசிகளின் அடிப்படையில், ஒருவரது இயல்பு, ஆளுமை மற்றும் எதிர்காலத்தை கணக்கிட முடியும். இயல்பிலேயே அதிக கோபம் கொண்ட ராசிகளைப் பற்றி காணலாம். இவர்களுக்கு சிறு ஆணவமும் இருப்பதால், பலமுறை தங்களுக்கே தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்மம்:
ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசி-யை ஆளும் கிரகம் சூரியன். சூரியன் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் அரசனுக்கு ஒத்த இயல்புடையவர்கள். இந்த ராசிக்காரர்களின் ராசியில் சூரியன் அசுபமான நிலையில் இருந்தால், பல கேடான விளைவுகளை அளிக்கிறார். அப்போது அகம்பாவம் உருவாகத் தொடங்குகிறது. 


இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை இவர்கள் மீது படும் போது, ​​அந்த நபரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மேலும் கோபத்தில் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களுக்கே தீங்காக விளைகிறது. சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் அது அவர்களுக்கு பிரச்சனையாக மாறும்.


இந்த ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானை வழிபட்டால் நல்ல பலன் பெறலாம். 


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் 


விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களின் கோபம் மிகவும் பலமாக இருக்கும். இவர்களை கோபத்தில் அடக்குவது மிகவும் கடினம். இந்த ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி. 


இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்கள் அல்லது கட்டளைகளை வழங்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அசுப கிரகங்களின் பார்வை இவர்கள் மீது விழும்போது, ​​​​அவர்கள் கோபத்தில் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் சற்று ஜாக்கிரதையாக நடக்க வேண்டும்.


அவர்களின் கோபத்தின் காரணமாக, பிறர் அவர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் கஷ்ட காலங்களில் தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவர்கள் கோபம் மற்றும் ஆணவத்தைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.


மகரம்:
மகர ராசியின் அதிபதி சனி பகவான்.  ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனிபகவான் அசுபமாக இருக்கும்போது அந்த நபரின் கோபம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்த வேளையில் இவர்களது பேச்சிலும் கட்டுப்பாடு இருக்காது. கோபத்தால் இவர்கள் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.


இவர்களின் வாழ்க்கை பதற்றம் மற்றும் முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களால் தங்கள் கோவத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. மகர ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தைக் குறைக்க சனிக்கிழமையன்று சனீஸ்வரர் கோவிலில் சனிபகவான் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் இரு ராசிகள் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR