சூரியனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும்

Sun Transit: சூரியனின் ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2022, 06:27 PM IST
  • வேலையில் சாதகமான மாற்றம் ஏற்படும்.
  • சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார்.
  • பணியிடத்தில் வெற்றி கிடைக்கும்.
சூரியனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும் title=

சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன் 12 கிரகங்களுக்கும் மன்னன் என்று அழைக்கப்படுகிறார். சூரியன் ராசி மாறும்போது அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். 

ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சூரியன் ராசி மாறும் காலத்தில் பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும். இதனால் பொருளாதார நிலை இன்னும் வலுவாகும். உத்தியோகத்தில் எதிரிகளாலும் ஆதாயமும் கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் விரிவடையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் அதிகபட்ச பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துறையில் வெற்றி பெறுவார்கள். இத்துடன் உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும். இதனுடன் தந்தையுடனான உறவும் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ஆதாயமும் உண்டாகும்.

சிம்மம்

சூரியனின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்கு விசேஷமாக இருக்கும். ஏனென்றால் சூரியன் இந்த ராசிக்கு அதிபதி ஆவார். சூரியனின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சூரியனின் இந்த சஞ்சாரம் அரசு வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும் 

விருச்சிகம்

சூரியனின் இந்தப் பெயர்ச்சி நிதித் துறையில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாற்றம் பல முன்னேற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக, சூரியனின் இந்த ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்

சூரியனின் இந்த ராசி மாற்றத்தால், உங்கள் இலக்கை எளிதாக அடைவீர்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையிலும் லாபம் கிடைக்கும். 

சூரியனின் ராசி மாற்றத்தின் போது, சிறிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையான பொழுதை செலவழிப்பீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் முதலீடு செய்தால் பொருளாதார பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கைத்துணை, தொழிலில் உங்களுடன் இணைந்து பணிபுரிபவர்கள் என உங்கள் கூட்டாளிகளின் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா; ஹனுமனை வழிபடும் முறைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News