ஒரு குழந்தைக்கு நான் தான் தந்தை என உரிமை கொண்டாடிய மூண்டு ஆண்கள்; குழம்பிபோன மருத்துவர்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தாவை சேர்ந்த 21 வயதுடைய சப்னா மைத்ரான என்ற பெண்ணை ஒரு இளைஞர் பிரசவத்திற்காக IRIS என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர்தான் அந்த பெண்ணின் கணவர் என அவருக்கு சிகிச்சையளித்துள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 


இதையடுத்து, சப்னா தனது கட்செவியஞ்சலில் ஸ்டேட்டஸா குளத்தை பிறந்ததை வைத்துள்ளார். இதை பார்த்த ஹர்ஷா கேத்ரி என்ற இளைஞர் மருத்துவமனைக்கு வந்து தான் தான் சப்னாவின் கணவர் குழந்தை என்னுடையது தான் என கூறியுள்ளார். இதை நம்ப மறுத்த மருத்துவர்கள் இந்த விவகாரத்தை காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையின் போது ஹர்ஷா தனது திருமண சான்றிதழை ஆதாரமாக காண்பித்துள்ளார். 


இதை நம்ப மறுத்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் தாயும் சேயும் இருந்த அறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், சம்பவ இடத்திற்கு பிரதீப் ராய் என்று ஒருவர் வந்துள்ளார். அவர் தான் சப்னாவின் கள்ளக்காதலன் என்றும், தனக்கு பிறந்தது தான் அந்த குழந்தை என்று அவரும் உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழம்பிபோன காவல்கள் அந்த பெண்ணிடமே இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது, சப்னா திருமண சான்றிதழுடன் வந்தவே தனது கணவர் மற்றும் அந்த குழந்தையின் அப்பா எனவும், தானும் அவரும் முதலில் காதலித்து வந்ததாகவும் அப்பொழுது தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். 


மேலும், என் கணவர் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் கூறியபோது என்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும், அவரது வீட்டார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஹர்ஷா மீது கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என மிரட்டிய பின்பு தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். இதுகுறித்து ஹர்ஷா கூறும்போது: என் மனைவிக்கு குழந்தை பிறந்ததே அவள் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் தான் தெரியும் அதை வைத்து தான் இங்கே வந்தேன்" என கூறினார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.