ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாய தோட்டம் அமைந்துள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மலர் வகைகள் வைக்கப்பட்டு உள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரம் பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று முதல் துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு உள்ளது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை சென்று கண்டு பார்வை இடலாம்.


ஜனாதிபதி மாளிகை உள்ளே இருக்கும் அருங்காட்சியை பார்வையிட கட்டணமாக 50 ரூபாய் செலுத்தி பொதுமக்கள் பார்வை இடலாம்.