Night Time Habits Lifestyle Tips: விடிய விடிய விழித்திருப்பது, எப்போதும் இரவு 10 மணிக்கு மேல் ஹெவியாக சாப்பிடுவது, நீண்ட நேரம் மொபைலில் வெப்-சீரிஸ் அல்லது திரைப்படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஆகிய பழக்கவழக்கங்கள் தற்கால இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதனால் உடல்நலன் சார்ந்த பிரச்னை மட்டுமின்றி மனநலம் சார்ந்து, அறிவாற்றல் சார்ந்தும் இளைஞர்கள் பிரச்னை சந்திக்கக்கூடும் என்கின்றனர் வல்லுநர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்திருக்கும் வகையில் அந்த இரவு நேரத்தை பயன்படுத்த வேண்டும். இளம் வயதில் இந்த பழக்கவழக்கங்கள் அதிகமாகும்போது பிற்காலத்தில் நீங்கள் எதிர்பாராத பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, இதனை சிரத்தையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, காலையில் நீங்கள் நல்ல பிரஷ்ஷாக எழுந்து, உங்களின் பணியை சுறுசுறுப்புடன் மேற்கொள்ளவும் முந்தைய நாள் இரவில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியமாகும். 


5 பழக்கவழக்கங்கள்


அந்த வகையில், இந்த 5 பழக்கவழக்கங்களை இரவில் நீங்கள் தூங்கச் செல்லும் செய்யும்பட்சத்தில் அறிவாற்றல் அதிகமாகும் என கூறப்படுகிறது. சரியான நேரத்தில் உணவு உண்ட பின், 10 மணிக்குள் தூங்கச்செல்வதை ஒரு வழக்கமாக வைத்திருங்கள். அப்படி நீங்கள் தூங்கச் செல்வதற்கு 1 மணிநேரம் முன்பு இந்த பழக்கவழக்களை வைத்துக்கொண்டால் உங்களின் அறிவாற்றல் சிறந்த விளங்கும். இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.


மேலும் படிக்க | மனதையும் உடலையும் இரும்பு போல ஸ்ட்ராங்கா ஆக்க..தினமும் காலையில் ‘இதை’ பண்ணுங்க!


நட்ஸ் மற்றும் விதைகள்


தினமும் படுக்கைக்கு செல்லும் முன் முந்திரி, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதைகள், சியா விதைகள் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் விதைகளை உண்ணும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் செலவு இருந்தாலும் நீண்ட நாள் பலனுக்கு இதனை செய்வது அவசியம். மேற்கூறியவற்றில் உள்ள ஒமேகா-3, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மேக்னீஸியம் போன்றவை உங்களின் நினைவாற்றலையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும். இதனை படுக்கைக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டால் இரவு பசியும் எடுக்காது, நொறுக்குத்தீனி பக்கம் கவனம் செல்லாது.


புதிர்களுக்கு தீர்வு காணுங்கள்


காலை பேப்பரில் வரும் சுடோக்கு, கேள்வி பதில் விளையாட்டு உள்ளிட்ட புதிர் சார்ந்த செயல்பாடுகளை இரவு தூங்கச் செல்லும்போது மேற்கொள்ளுங்கள். இதனால் மூளை கூர்மையாகும். பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கும், விமர்சன ரீதியிலான சிந்தனை திறனும் மேம்படும்.


பிடித்த புத்தகங்களை வாசியுங்கள்


சிறுகதை, நாவல், கவிதை போன்ற புனைவு புத்தகமாக இருந்தாலும் சரி, வாழ்கை வரலாறு, சுய முன்னேற்ற புத்தகமாக இருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்த புத்தகங்களை குறைந்தபட்சம் 1 மணிநேரம் வாசியுங்கள். நிச்சயம் உங்களுக்கு புது புது யோசனைகள் வர இது வழிவகுக்கும். அமைதியான சூழலில் நல்ல வெளிச்சத்தில் இதனை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மூச்சு பயிற்சி


இரவில் படுக்கையில் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். இது மனதில் எழும் கவலைகள், அழுத்தங்களை தீர்க்கும். உணர்ச்சிப் பெருக்கை நிதானத்திற்கு கொண்டுவரும். இதனால் அறிவாற்றலும் பிரகாசமாகும்.


மொபைலை தள்ளிவைங்க


மொபைல், லேப்டாப், பிசி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தள்ளிவைய்யுங்கள். Kindle புத்தகத்தை தனி சாதனத்தில் வாசித்தால் பிரச்னையில்லை, அதை மொபைல், லேப்டாப்பில் வாசித்தால் அதிக கவனச்சிதறல் ஏற்படுவது மட்டுமின்றி கண்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். இரவில் அதிக ஒளியை பார்ப்பதால் கண்கள் அதிகம் சோர்வடையும். இதனால், உங்கள் அறிவாற்றலில் சுணக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இரவு அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இவை பொதுவான கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | காலையில் இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ