மனதையும் உடலையும் இரும்பு போல ஸ்ட்ராங்கா ஆக்க..தினமும் காலையில் ‘இதை’ பண்ணுங்க!

Daily Habits To Become Mentally Strong : மனதளவில் தைரியமாக இருப்பதற்கு, நாம் சில தினசரி பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

Daily Habits To Become Mentally Strong : உடலும் மனதும் ஒரே அளவில் திடமாக இருப்பது அவசியமாகும். பல சமயங்களில், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, உயிர் போகும் தருவாயில் இருந்து மீண்டு வருவதற்கு காரணம், மன உறுதிதான். அப்படி, நாம் நமது மனதை உறுதியாக வைத்துக்கொள்ள சில விஷயங்களை செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

1 /8

தியானம்: மனதை உறுதிப்படுத்திக்கொள்ள, தினமும் காலையில் தியானம் செய்தால்  மனம் உறுதி பெறும் என கூறப்படுகிறது. 

2 /8

எழுதுதல்: காலையில் எழுந்தவுடன், நம் மனதில் உள்ள விஷயங்களை ஒரு ஜர்னலில் எழுத வேண்டும். அப்போதுதான் உங்களின் மனம் தெளிவாகும். 

3 /8

தினசரி டாஸ்க்: நீங்கள் ஒரு நாளில் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பதை தினமும் எழுத வேண்டும். அந்த நாளின் இறுதியில் அவற்றை முடித்துள்ளீர்களா என்று பாருங்கள்

4 /8

நன்றியுணர்வு: தினமும் உங்கள் கையில் ஏற்கனவே இருக்கும் விஷயங்கள் குறித்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். அப்போதுதான், உங்களுக்கு தேவையானவை கைக்கு வந்து சேரும். 

5 /8

உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் எண்டார்ஃபின்ஸ் ஹார்மோன்கள் சுரக்கிறது. இதனால், மனம் தெளிவடைகிறது. 

6 /8

எதிர்மறை எண்ணங்கள்: உங்களுக்குள் நீங்கள் அதிகமாக பேசிக்கொள்ளும் நெகடிவான விஷயங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்களே பெரிய நண்பராக இருந்து, உங்கள் எண்ண அலைகளை சரிசெய்ய வேண்டும்.

7 /8

பிறருடன் பேசுவது:  உங்களுக்கு பிடித்தவர்கள், உங்களுடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். இது, உங்களுக்கு தனிமை உணர்வை தராமல் இருக்கும். 

8 /8

ஓய்வு: உங்கள் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு தேவைப்படும் என்று தோன்றும் போது, ஓய்வு எடுப்பது அவசியம் ஆகும்.