Travel Tips: “மறக்காதீங்க..வருத்தப்படுவீங்க..” சுற்றுலா செல்கையில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
சுற்றுலா செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
குடும்பத்துடன் கோயில் சுற்றுலா சென்றாலும் சரி நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்றாலும் சரி, கண்டிப்பாக உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள்தான் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். எத்தனை முறை சரி பார்த்தாலும் நமக்கு தேவையான ஏதாவதொன்றை மறந்திருப்போம். அதற்கு இந்த வழிமுறையை கடைபிடியுங்கள்.
லிஸ்டை உருவாக்குங்கள்:
பயணம் மேற்கொள்ள இருப்போருக்கு, சுற்றுலா செல்ல கிளம்புவதற்கு முன்தின நாள் வரை வேலைகள் இருந்து கொண்டு இருக்கும். அப்படி எத்தனை வேலைகள் இருந்தாலும் அதை ஒரு பத்து நிமிடங்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் பயணத்தின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை பட்டியல் போடுங்கள். இப்படி பட்டியல் போடுவதால், கடைசி நிமிடத்தில் “எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டோமா?” என்ற குழப்பத்தையும் அப்படி எதையாதவது மறந்து விட்டால் “அய்யோ இதை மறந்துட்டோமே..” என்ற டென்ஷனையும் தவிர்க்க முடியும்.
மங்கையர் கவனத்திற்கு..
பொதுவாக, பெண்கள் எங்கேயாவது இரண்டு நாட்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்று ப்ளான் செய்தாலே “குறுக்க இந்த கெளசிக் வந்தா..” என்பது போல மாதவிடாய் நாளும் வந்துவிடும். அப்படி பயணம் மேற்கொள்கையில் மாதவிடாய் வருவது எவ்வளவு சிரமாமான விஷயமோ..அதைவிட பெரிய சிரமம் பயணத்தின் போது உங்கள் கையில் சானிட்டரி பேட் இல்லாதது. பயணத்தின்போது போகும் இடங்களைப் பொறுத்து, குறைவான அளவு நாப்கினையாே அல்லது அதிக அளவு நாப்கினையோ எடுத்துக்கொள்ளலாம்.
முக்கியமான பொருட்களை நீங்களே எடுத்து வையுங்கள்
பேக்கிங் செய்ய நேரமில்லை என்றால், நாம் வீட்டில் இருப்போரை நமக்கான பொருட்களை எடுத்து வைக்க சொல்லி கூறுவோம். பயணத்தின் போது பையை திறந்தால் உங்களுக்கு தேவையான முக்கியமான பொருள் இல்லாமல் பாேயிருக்கும். அதன்பிறகு நமக்கான பொருளை எடுத்து வைத்த நபரிடம் கடிந்து கொள்வோம். இது, நம்முடைய அஜாக்கிரதையின் பின்விளைவுதான். அதனால், நமக்கு தேவையான பொருட்களை நாமே எடுத்து வைக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
பயணத்தின் போது பெரும்பாலானோர் ஹோட்டல் அல்லது லாட்ஜ்களில்தான் தங்குவோம். அப்படி நாம் தங்க உள்ள இடம் குறித்து முன்னரே தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அது பாதுகாப்பான இடம்தானா? செல்ல இருக்கும் சுற்றுலா தளத்திற்கும் தங்க இருக்கும் இடத்திற்கும் எத்தனை கி.மீ தொலைவு போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தங்கும் இடம் குறித்து வலைதளத்தில் யார் யார் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்து கொள்ளலாம். பயணத்தின் போது அதிக நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்வதை பெரும்பாலும் தவிர்த்திடுங்கள். அப்படியே நீங்கள் அவற்றை எடுத்து சென்றாலும், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது என்பதை மறவாதீர்கள்.
மேலும் படிக்க | Summer Tips: வெயில் காலத்தில் கண்டிப்பாக இந்த உணவுகளை தொடாதீங்க!
கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:
உங்களுக்கு தேவையான பொருட்களைத்தாண்டி, பயணத்தின்போது அசெளகரியம் ஏற்படாமல் இருக்க சில பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் சில,
கழிவறையில் பயன்படுத்தும் பொருட்களான சோப், ஷாம்பு, பேஸ்ட், பிரஷ் ஆகியவை அவசியம். வெயிலில் பயணிக்கும் நிலை இருந்தால் சன்ஸ்கிரீன் லோஷன், மாய்ஸ்ட்ரைசர் ஆகியவற்றை எடுத்து செல்லவும்.
இரவு முழுவதும் பஸ், இரயில் அல்லது விமானத்தில் உட்கார்ந்து கொண்டே பயணிக்க நேரிடும் என்று தெரிந்தால் கழத்துக்கான தலையணையை எடுத்து செல்லுங்கள். இது, பயணத்தின் போது தூங்குவதற்கு உதவும்.
உங்களுடயை தண்ணீர் பாட்டிலை கண்டிப்பாக எடுத்துச்செல்லுங்கள். செல்லும் இடங்களில் எல்லாம் தண்ணீர் பிடித்து சேகரித்து கொள்ளுங்கள்.
பாலித்தீன் அல்லது பேப்பர் பைகளை இரண்டு மூன்று வைத்துக் கொள்ளுங்கள்.
துப்பட்டா அல்லது கைக்குட்டை வைத்துக்கொள்ளுங்கள்.
ஹைக்கிங், மலையேறுதல் போன்ற அம்சங்களை உங்கள் பயணம் உள்ளடக்கியிருந்தால் அதற்கு ஏற்ற ஷூ, ஷாக்ஸ் ஆகியவற்றை வைத்துக்காெள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ