South Indian Recipes: குழி பணியாரம் முதல் குழா புட்டு வரை..தென்னிந்தியாவின் ‘கமகம’ ஸ்நாக்ஸ் ரெசிப்பிக்கள்

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் தென்னிந்திய உணவு வகைகளின் ரெசிப்பிக்கள்.  

Written by - Yuvashree | Last Updated : May 5, 2023, 07:12 PM IST
  • இந்தியர்களின் ஃபேவரட் உணவு பட்டியல்களில், கண்டிப்பாக பல தென்னிந்திய உணவுகள் இடம் பெற்றிருக்கும்.
  • செட்டி நாடு உணவு வகைகளில் ஒன்றான குழி பணியார்த்தை இனிப்பாகவும் சாப்பிடலாம்
  • பணியாரம் முதல் புட்டு வரை நாக்கில் எச்சில் ஊற வைக்கும் டிஷஸ்.
South Indian Recipes: குழி பணியாரம் முதல் குழா புட்டு வரை..தென்னிந்தியாவின் ‘கமகம’ ஸ்நாக்ஸ் ரெசிப்பிக்கள் title=

இந்தியர்களின் ஃபேவரட் உணவு பட்டியல்களில், கண்டிப்பாக பல தென்னிந்திய உணவுகள் இடம் பெற்றிருக்கும். இதில் சில உணவுகள் பண்டிகைகளின் போது செய்யப்படும், சில உணவுகள் தினசரி சிற்றுண்டிக்காகவே செய்யப்படும். அப்படி சில உணவுகளை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோமா? 

குழி பணியாரம்:

செட்டி நாடு உணவு வகைகளில் ஒன்றான குழி பணியார்த்தை இனிப்பாகவும் சாப்பிடலாம் காரமாகவும் சாப்பிடலாம். காரமாக செய்யும் குழிப்பனியாரங்கள் காரச்சட்னி அல்லது சாம்பாருக்கு தோதுவாக இருக்கும். 

செய்முறை:

  • தேவையான அளவு அரிசி, வெந்தையம், உளுந்து ஆகியவற்றை 2 மணிநேரம் தண்ணீரில் ஊர வைக்கவும்.
  • ஊரவைத்த அரிசியை நன்கு சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். 
  • அரைத்த மாவு, புளித்த பிறகு அதை குழி பணியரத்திற்கு தயாரிக்கலாம். 
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி கரிவேப்பிலை, சுண்டல் கடலை ஆகியவற்றை போட்டு நன்கு வருத்து எடுத்துக்கொள்ளுங்கள். 
  • மாவில், வருத்ததை கொட்டி தேவையான அளவு உப்பு, சிறிதளவு சோடா மாவு ஆகியவற்றை போட்டு கரண்டியை வைத்து கிளருங்கள்
  • குழி பணியரத்திற்கு தேவையான கடாயை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அதில் சிறிது நேரம் எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். 
  • பின்பு, கலக்கிய மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றுங்கள்
  • ஒரு பகுதி வேவதற்கு 30 விநாடிகள் எடுக்கும் அதன் பிறகு இன்னொரு பகுதியை திருப்பிப் போடுங்கள். 
  • சுட சுட குழி பணியரத்தை அதற்கு ஏற்ற சட்னியுடன் சுவைத்து சாப்பிடுங்கள். 

வெங்காய பாேண்டா:

சாயங்கால நேரத்தில் ஒரு டீயுடன் போண்டா சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கமாம். இந்த ரெசிப்பியை வைத்து ட்ரை செய்து பாருங்கள். 

செய்முறை

  • பெரிய போண்டாவை எடுத்து, அதன் தோளை நீக்கி நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். 
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், கோதுமை மாவு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். 
  • பிசைந்த மாவை உருண்டை பிடித்து கொள்ளுங்கள். 
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள். 
  • எண்ணெய் நன்றாக சூடேறிய பின்னர் தீயை குறைவான அளவில் வைத்து போண்டாவை சுட்டு எடுக்கவும். 
  • சுட சுட போண்டாவை அதற்கு ஏற்ற சைட் டிஷ் உடன் சுவையுங்கள். 

ஆப்பம்-தேங்காய் பால்:

ஆப்பத்திற்கு ஆட்டுக்கால் பாயா மட்டுமல்ல, தேங்காய் பாலும் அம்புட்டு சுவையாக இருக்கும். நான்கு ஆப்பத்தை பாலுடன் தள்ளிவிட்டு படுத்தால் சொர்கமே கண்களுக்கு தெரியுமாமே..

செய்முறை:

  • ஆப்பம் செய்வதற்கு மாவு தேவை, அதை தயார் செய்ய பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு சுத்தம் செய்து ஊற வைத்து மாவினை ஆப்பம் பதத்திற்கு அறைக்க வேண்டும். 
  • அது புளிப்பேறியவுடன் ஆப்பத்திற்கான மாவு ரெடியாகிவிடும். 
  • தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சிறிது ஏலக்காய் சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  • அரைத்த தேங்காயிலிருந்து வடிகட்டியை வைத்து பாலை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் ஊற்றி வடிக்கட்ட வேண்டும். 
  • இருக்கும் பாலிற்கு ஏற்ற அளவு சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். 
  • ஆப்ப கடாயை சூடு செய்து ஆப்பங்களை சுட்டு எடுத்துக்கொள்ளவும். 
  • இப்போது சுட சுட ஆப்பம் தேங்காய் பால் ரெடி. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் அதிரடியாக உயரும் ஊதியம், 3-4% டிஏ உயர்வு நிச்சயம்

குழாய் புட்டு:

கேரளாவில் காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் குழாய் புட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? 

செய்முறை:

  • புட்டு செய்யும் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 
  • கால் கரண்டி உப்பு சேர்த்து நன்றாக மிகஸ் செய்து கொள்ளுங்கள். 
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். 
  • தண்ணீர் அதிகமாகமால் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு அகலமான பாத்திரத்தை புட்டு செய்வதற்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். 
  • 2 அல்லது 3 கப் தண்ணீரை அந்த புட்டி கின்னத்தில் ஊற்றி காய வையுங்கள். 
  • புட்டு குழாயை எடுத்து அதில் கால் பாதி மாவு சேருங்கள். அதன் பிறகு கொஞ்சம் தேங்காய் துருவலை சேருங்கள். இப்படி அந்த புட்டுக்குழாய் முழுமையாகும் வரை செய்யுங்கள். 
  • தீயை மீடியம் லெவலில் வைத்து அந்த புட்டை வேகவிடுங்கள். சாதாரணமாக ஒரு புட்டு வேவதற்கு 9 முதல் 12 நிமிடங்கள் வரை எடுக்கும். 
  • புட்டு குழாயிலிருந்து தட்டில் போட்டால் குழாய் புட்டு ரெடி. 

மேலும் படிக்க | SBI வழங்கும் அசத்தலான ஹெல்த் எட்ஜ் சுகாதார காப்பீடு; வாய்ப்பை தவற விடாதீர்கள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News