Name Astrology:  சிலர் தங்கள் தொழிலில் மிக வேகமாக முன்னேறுவதைக் காணலாம். அவர்கள் நிச்சயம் திறமைசாலிகள்  என்றாலும், அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தடையில்லாமல் கிடைக்கும். திறமை அதிகம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தொழிலில் தடைகளை சந்திப்பதை பார்த்திருக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கூறினால், திறமை மற்றும் கடின உழைப்பைத் தவிர, அதிர்ஷ்டத்தின் தயவும் அவர்களுக்கு நிறைய முன்னேற்றத்தை அளிக்கிறது. சிறு வயதிலேயே தங்கள் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறும் அத்தகைய பெண்களைப் பற்றி இன்று நாம் அறிந்து கொள்ளலாம். தங்களின் பெயரில், ‘இந்த’ முதல் எழுத்தை கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும் (Luck),  தங்களுக்கென்று ஒரு  தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். 


A என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள் (Name Starts with A): A வில் தொடங்கும் பெயர்களை கொண்ட பெண்கள் கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள்.  அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இளம் வயதிலேயே இருக்கும் அவர்களுக்கு வாய்ப்புகளும் சேர்ந்து வெற்றியை அள்ளிக் கொடுக்கிறது. சிறு வயதிலேயே முதலாளி ஆகி சாதனை படைக்கின்றனர்.


ALSO READ | புத-ஆதித்ய யோகம்: இந்த ‘3’ ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..!!


 M என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள் (Name Starts with M): M  என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்ட பெண்கள் நேர்மையானவர்கள் என்பதோடு கடின உழைப்பாளிகள். பிறரிடம் இருந்து வேலை வாங்கும் திறன் பெற்றவர்கள் . ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கமாக இருக்கும். இந்த பெண்கள் விரைவில் வெற்றி இலக்கை அடைகிறார்கள். அதிர்ஷ்டம் இவர்களுக்கு கை கொடுக்கிறது


T என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள் (Name Starts with T): T என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள், பணியிடத்தில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குகிறார்கள். வெகு சீக்கிரத்தில் பதவி கிடைப்பதுடன், மரியாதையும் பெறுவார்கள். பிறவியிலேயே தலைமை பண்புடன் பிறக்கும் இவர்கள் அவர்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் புகழின் உச்சத்தை அடைகிறார்கள்.


ALSO READ | Astrology: இந்த 5 ராசிக்காரர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்!!


P என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள் (Name Starts with P) : P என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்ட பெண்கள், சிறு வயதிலேயே புகழ் பெறத் தொடங்குவார்கள். அவர்களின் கடின உழைப்பும், அவர்களுக்கு வெற்றியை தேடித் தருகிறது. விரைவில், வாழ்க்கையில் உயரிய அந்தஸ்தை அடைந்து பெரும் பணக்காரர்களாகி ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR