Astrology: இந்த 5 ராசிக்காரர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்!!

 ஜோதிடத்தில், சில ராசிக்காரர்களை நாம் குருட்டுத்தனமாக நம்பலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த ராசிக்காரர்களை நாம் முழுமையாக நம்பலாம் என இந்த பதிவில் காணலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2021, 06:33 PM IST
Astrology: இந்த 5 ராசிக்காரர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்!! title=

Astrology: நம்பிக்கைக்கு உரிய தோழர்கள், உறவினர்கள் நமக்கு கிடைத்துவிட்டால், நாம் அதிர்ஷ்டசாலிகள்தான். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் யாரிடமாவது நம்பகமாக கூற முடிந்தால், அது ஒரு வரம். எனினும், இந்த விஷயத்தில் மிகச் சிலரே அதிர்ஷ்டசாலிகளாக உள்ளார்கள். ஏனென்றால் இப்படிப்படட்ட நம்பகமான நபர்களை நாம் சந்திப்பது மிக அரிது. ஜோதிடத்தில், சில ராசிக்காரர்களை நாம் குருட்டுத்தனமாக நம்பலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த ராசிக்காரர்களை நாம் முழுமையாக நம்பலாம் என இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

மேஷ (Aries) ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள், கனிவானவர்கள், எப்போதும் உண்மையை ஆதரிக்கிறவர்கள். இவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசாதவர்கள். ஆகையால் மேஷ ராசிக்காரர்களிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

கடக ராசி 

கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்கள். கடகராசிக்காரர் உங்களுக்கு நண்பராக இருந்தால், அவர் உங்களுக்கு கிடைத்த பரிசு போன்றவர். கடக ராசிக்காரகள் எப்போதும் உங்கள் ரகசியத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள். மேலும் உங்கள் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

ALSO READ: குரு பெயர்ச்சி; இந்த 4 ராசிக்காரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் 

சிம்ம ராசி 

சிம்ம (Leo) ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள் மற்றும் மிகவும் நம்பகமானவர்கள். அவர்கள் யாருடைய நம்பிக்கையையும் உடைக்க மாட்டார்கள். எப்போதும் பிறரது கடினமான காலங்களில் உதவ தயாராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பொய்களை வெறுப்பவர்கள். எனவே அவர்களுடன் நட்பு கொள்ளும்போது இந்த விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்.

மகர ராசி

மகர (Capricorn) ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள். மேலும், அவர்கள் மிகவும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த ராசிக்காரர்களை கண் மூடிக்கொண்டு நம்பலாம். எனினும், இவர்கள் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவதும் உண்டு.

கும்ப ராசி 

கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள், தங்கள் தர்க்கரீதியான, நம்பகமான ஆளுமையால் அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்து விடுவார்கள். அவர்களது நேர்மையை ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:Weekly Horoscope: வெற்றி மழையில் முழுகப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News