புதுடெல்லி: ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் வித்தியாசமானது. அவற்றை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஜோதிடத்தின் படி குழந்தைகளை அவர்களின் ராசியின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். மேஷ ராசி குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது மிகவும் சிரமமான விஷயமாம்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி குழந்தைகளை மகிழ்விப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? 
ஒருவரின் ஜென்ம ராசியின் மூலம், அவர்களின் குணம், பழக்கம், குறும்புகள் மற்றும் குழந்தை வயது போன்ற சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டு அவர்களின் குறைபாடுகளைப் போக்கலாம்.


குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்கிறோம். மேஷ ராசி குழந்தைகளிடம் எப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்பதை ஆழமாக அறிந்து கொள்ளுங்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்


மேஷ ராசிக் குழந்தைகள் கனவு காண்பவர்கள், உணர்ச்சிவசப்பட்டவர்கள், அசாதாரண மொழிபெயர்ப்பாளர்கள், தாராளமானவர்கள் மற்றும் உள்ளார்ந்த தலைமைத்துவ குணங்களைக் கொண்டவர்கள்.


அவர்கள் எப்போதும் தங்கள் மீது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். அவர்களைப் புகழ்ந்து பேசினால், அதாவது செல்லம் கொஞ்சினாலும், பாராட்டினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.


மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை


வெளியே செல்வதில் ஆர்வம்
இந்த ராசிக்காரர்கள் பயணம் செய்வதை விரும்புவார்கள், அதனால்தான் அவர்கள் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுடன் வெளியே செல்ல அடம் பிடிப்பார்கள். அவர்களின் கண்கள் வட்டமானவை, ஆனால் முழங்கால்கள் பலவீனமாக இருக்கும்.


கோபம் வந்தால் ருத்ர தாண்டவம்
மேஷ ராசிக்காரர்களுக்குக் கோபம் அவ்வளவாக வராது. ஆனால் கோபம் வந்துவிட்டால், அந்த அக்னிப் பார்வையின் முன் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது. மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள், 


வேலையைச் செய்வதில் உறுதியாக இருப்பவர்கள், ஆனால், அதைச் செய்த பிறகுதான் சொல்வார்கள். ஒரு வேலையை செய்ய முடியாது என பிறர் விட்டுவிட்டாலும், அந்த வேலையை அவர் கைவிட்டுவிட்டதாக நீங்கள் உணர்ந்தாலும், மேஷ ராசி குழந்தைகள் அந்த வேலையை முடிக்க உள்ளார்ந்த முயற்சி செய்கிறார்கள்.


எதையும் சீக்கிரம் மறக்காதவர்கள்
மேஷ ராசிக் குழந்தைகள் எதையும் எளிதில் மறப்பதில்லை, அதனால்தான் பள்ளியில் குழந்தையுடன் சண்டை வந்தால், அவர்களைப் பழிவாங்கும் வரை மறப்பதில்லை. தன்னுடைய பேச்சை பிறர் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதை கேட்காவிட்டால் கோபம் வந்துவிடும்.  


மேலும் படிக்க | மீண்டும் ராசி மாறுகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம்


இன்ஜினியர் அல்லது டாக்டர் ஆக வாய்ப்பு உள்ளது
இக்குழந்தைகளின் மற்ற கிரகங்களின் நிலை நன்றாக இருந்தால் இன்ஜினியர் அல்லது டாக்டராகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடமும் விரைவாகச் சொல்ல மாட்டார்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை.


துறுதுறுவென சுறுசுறுப்பாக இருக்கும் மேஷ ராசி குழந்தைகளை காயம் ஏற்படாமல் பாதுகாக்கவும். அதேபோல, எப்போதும் தங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் இருப்பதற்கு சில காரணங்களைக் கண்டுபிடிப்பார்கள். எனவே, அவர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும். 


அவர்களின் உற்சாகத்தை ஒருபோதும் அடக்க முயற்சிக்காதீர்கள், அது அவர்களின்  மனதை விட்டு வெளியே போகாமல், குரோதமாக தங்கிவிடும்.


பிறரின் கட்டளைக்கு கீழ்ப்படிவது அவர்களுக்கு எரிச்சல் தரும் விஷயம். ஆனால், மேஷ ராசிக் குழந்தைகளிடம் மென்மையாகவும் அன்பாகவும் ஏதாவது வேலை சொன்னால், அவர்கள் அதை விரைவாகச் செய்வார்கள்.
வேலைக்கு கிடைக்கும் பாராட்டு, அவர்களை மேலும் மகிழ்ச்சியாக்கும். மேஷ ராசிக் குழந்தைகள் தண்ணீரில் கவனமாக இருக்க வேண்டும், தண்ணீருடன் விளையாட வேண்டாம் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.


மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR