நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, அக்டோபர் மாதம் 7 அன்று தொடங்கி, அக்டோபர் 15 அன்று, விஜய தசமி அன்று நிறைவு பெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.


ALSO READ | காலாவதியான மருந்துகளை வைத்து துர்க்கை சிலையை உருவாக்கிய அசாம் கலைஞர்


நவராத்திரி வராலாறு
புராண கதைகளின் படி, அரக்கர்களின் அரசனான மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அப்போது அந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. எனவே, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை உருவாக்கினார்கள். 


15 நாட்கள் நீண்ட போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர். முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.


நவராத்திரி நான்காம் நாள்
இதுவரை அம்பிகையை வழிபட்ட நாம், அடுத்து வரும் மூன்று நாள்களும் மகாலட்சுமியை வணங்க வேண்டும். நான்காம் நாளில் லட்சுமியை நறுமணம் மிக்க தூப தீபங்களோடு வணங்க வேண்டும். இதனால் நிலையான செல்வவளத்தை வழங்குவாள் எனப்படுகிறது.


நவராத்திரி மூன்றாம் நாள் பூஜை :-


தேவி : இந்திராணி தேவி
மலர் : சம்பங்கி
நைவேத்தியம்: சர்க்கரை பொங்கல்
திதி : த்ருதீயை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்,
ராகம் : காமபோதி ராகம்


ALSO READ | அகண்ட ஜோதியில் படிவது கரி அல்ல, குங்குமப்பூ! ஜோத்பூர் தெய்வத்தின் திருவிளையாடல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR