அம்பிகை, மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமியன்று, காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 10 ஆம் நாள், விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம்  நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை  விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
 
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி  கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.


சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.  சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது  படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.


முப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.


நவராத்திரி பத்தாம் பத்தாம் நாள் பூஜை முறை: 


தேவி : அம்பிகையை விஜயாம்பாள் (பார்வதியின் ஒரு அம்சம்) 


விஜய தசமியையொட்டி பூஜையறையில் மலர் கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகை, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சதாம், நைவேத்யம் செய்ய வேண்டும்.