இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளமானது, இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இன்றும் நாளையும் இலவச சேவையை வழங்குகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலமான OTT இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்தது. அதாவது, பயனர்கள் அதன் உள்ளடக்கத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். இது மட்டுமல்லாமல், நெட்ஃப்ளிக்ஸ் பிரீமியம் (Netflix StreamFest 2020), அம்சங்களும் பார்வையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கும். இந்த வசதி நேற்று இரவு 12 மணி முதல் வழங்கப்படும் என்று இது நெட்ஃபிலிக்ஸ் ஏற்கனவே அறிவித்தது.


ALSO READ | இந்த புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும்!


தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் மில்லியன் கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நெட்ஃப்ளிக்ஸ்-ல் கிடைக்கின்றன, இதற்காக மக்கள் முதலில் தங்கள் தொலைபேசிகளில் ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளேஸ்டோரிலிருந்து (Google Play) நெட்ஃபிலிக்ஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதைப் பதிவிறக்கிய பிறகு, பார்வையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ID-யை உள்ளிட்டு தங்கள் கணக்கைத் உருவாக்க வேண்டும். பார்வையாளர்கள் Netflix.com/streamfest இதற்கு குழுசேரலாம்.


வெற்றிகரமாக Sign In செய்த பிறகு, அடுத்த இரண்டு நாட்களுக்கு அதாவது 5 மற்றும் 6 டிசம்பர் 2020-க்கு நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தை இலவசமாகக் காண முடியும். நிறுவனம் இந்த வசதியை மொபைல் மட்டுமல்லாது, டிவி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகளிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது பார்வையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ப பயன்பாட்டை எளிதாக்கும். இருப்பினும், இந்த சலுகையின் கீழ் பார்ப்பதற்கு Standard உள்ளடக்கத்தை மட்டுமே நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் பொருள் நீங்கள் உயர் வரையறையிலான உள்ளடக்கத்தை அனுபவிக்க முடியாது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR