விடுமுறை நாளில் இதை மட்டும் மனைவியிடம் செய்துவிடாதீர்கள்
தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையில் இருக்கும் கணவன்மார்கள், ஒரு விஷயத்தை மட்டும் மனைவியிடம் செய்யக்கூடாது.
தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக பலரும் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இந்த விடுமுறை தினம் அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்றால், சில விஷயங்களை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் வெளிப்படையாக மனைவியிடம் பகிர்ந்து கொள்வது உங்களின் பண்டிகை கொண்டாட்டத்தை கெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | வாழ்க்கையில் பிரச்சனைகள் விடாமல் துரத்துகிறதா... சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்!
ஏனென்றால், இம்மாதிரியான சிறப்பான நாட்களில் மட்டுமே தங்கள் வாழ்க்கையின் கடந்த கால நினைவுகள் மற்றும் சிறப்பான தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அமையும். ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும்போது, நாங்கள் அப்போது எப்படி இருந்தோம் தெரியுமா? இந்த உடை அவளுக்கு அப்படி இருக்கும்? என்றெல்லாம் கம்பேர் பண்ணி பேசுவது தன்னியல்பையும் மறந்துவந்துவிடும். இந்த இடத்தில் தான், கணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மனைவிக்கு எப்போதும் தன்னை மட்டுமே கணவன் உயர்வாக பேச வேண்டும் என்றும் எண்ணம் இருக்கும். அந்த நேரத்தில், அவர்கள் அணிந்திருக்கும் உடை அல்லது நடவடிக்கையை உங்களின் முன்னாள் காதலியுடன் கம்பேர் பண்ணி பேசிவிடவே கூடாது. நிச்சயமாக குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு வார்த்தையால் மொத்த பண்டிகைக்கான நேரமும் வீணாகிபோய்விடும்.
அதேநேரத்தில் அந்த நொடி முதல் புதிய பிரச்சனை வெடிக்கவும், இருவருக்கும் இடையிலான சுமூக உறவு பாதிக்கவும் மேலதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், விழாக்காலங்களில் எப்போதும் எதிர்மறையாக பேசுவதை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனைவியை மகிழ்விக்கும் வகையில் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி செய்தீர்கள் என்றால் விழா காலம் இன்னும் சிறப்பானதாக மாறி, குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி; வாழ்க்கையில் குழப்பத்தை சந்திக்கும் ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ