BSNL Prepaid Recharge: 99 ரூபாயில் தொடங்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்
சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்
புதுடெல்லி: BSNL நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவில் 3 புதிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களைச் சேர்த்துள்ளது, ரூ.99 முதல் தொடங்கும் இந்த ப்ளான்கள் 65 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதோடு பல நன்மைகளும் இந்த ப்ளான்களில் கிடைக்கிறது.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவில் 2 புதிய மாதாந்திர பேக்குகளை அறிமுகப்படுத்தியது. ஒன்றல்ல... இரண்டல்ல... ஒரே நேரத்தில் 3 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிக ஆரவாரமில்லாமல் BSNL அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மூன்று திட்டங்களும் வெவ்வேறு வேலிடிட்டியுடன் வருகின்றன. இருப்பினும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் திட்டங்களின் விலை மலிவானது என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும் படிக்க | BSNL பயனர்களுக்கு நல்ல செய்தி: குறைந்த விலையில் இனி அதிக நன்மைகள்
பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (BSNL) இந்த மூன்று புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.99, ரூ.118 மற்றும் ரூ.319 விலையில் வருகின்றன. இந்த மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் வெவ்வேறு வேலிடிட்டியுடன் வருகின்றன.
ரூ.99 பேக்குடன், 18 நாட்கள் வரை வேலிடிட்டி கிடைக்கும். ரூ.118 திட்டம் 20 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, ரூ.319 திட்டம் 65 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
ரூ.99, 118 மற்றும் 319 ரீசார்ஜ் திட்ட நன்மைகள்
ரூ.99திட்டம் 18 நாட்கள் வரை செல்லுபடியாகும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புடன் இலவச PRBT வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் தொடர்பான பலன்கள் வழங்கப்படவில்லை.
மேலும் படிக்க | ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நாட்கள் சலுகையை அதிகரித்த BSNL: சூப்பர் ஆஃபர்
ரூ.118 திட்டத்தில், பயனர்கள் தினசரி 0.5ஜிபி டேட்டா அணுகலைப் பெறுவார்கள். 20 நாட்கள் வரை செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில், தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40 Kbp ஆக குறைகிறது. இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி மற்றும் ரூ.99 திட்டம் போன்ற இலவச PRBT வசதியும் உள்ளது.
ரூ.319 திட்டமானது பயனர்களுக்கு 10ஜிபி டேட்டாவைக் கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 300 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. நிறுவனத்தின் இந்த திட்டம் பயனர்களுக்கு 65 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
பிஎஸ்என்எல் புதிய மாதாந்திர திட்டங்கள்
BSNL நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.228 மற்றும் ரூ.239. இந்த திட்டங்கள் 1 மாதம் வரை செல்லுபடியாகும்.
ரூ.228 ரீசார்ஜ் செய்வதில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
BSNL இன் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ரூ.10 மதிப்புள்ள கூடுதல் பேச்சு நேரம் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற பலன்களையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | 80 ஜிபி டேட்டா மற்றும் 80 நாட்கள் வேலிடிடி ரூ 399 ரீசார்ஜ் ப்ளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR