இணைய மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, ​​மறுபுறம் மோசடி செய்பவர்கள் பணத்தை திருடுவதற்கு புதிய வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். சமீபத்தில் ஆன்லைன் மோசடி வழக்கில், மும்பை பெண் ஒருவர் தனது கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக ஐபோனில் இருந்து புதிய ஆண்ட்ராய்டு போனுக்கு மாறியதால் ரூ.7 லட்சத்தை இழந்தார். இந்த புதிய மோசடி பற்றி தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்ன விசயம்?


கிரெடிட் கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களில் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கினார். 40 வயதான பெண், சௌரப் ஷர்மா என்பவரிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றார். அவர் தன்னை ஒரு வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு புதிய கிரெடிட் கார்டு மற்றும் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு கிளப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை கொடுப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சலுகையைக் கேட்டதும், அந்தப் பெண் புதிய கிரெடிட் கார்டை எடுக்க ஒப்புக்கொண்டார். செயல்முறையைத் தொடங்க, அவர் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இனி தரமான அரிசி கிடைக்கும்


ஏமாற்றப்பட்டது எப்படி?


மேலும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி மட்டுமே கிரெடிட் கார்டை செயல்படுத்த முடியும் என்று மோசடி செய்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அந்தப் பெண் ஐபோனைப் பயன்படுத்துவதால், அந்தச் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் இந்த செயல்முறையை மோசடி நபர் மோற்கொள்ளுமாறு அறிவுறுத்த அதனை தட்டாமல் அந்த பெண் கடைபிடித்துள்ளார். ஆண்ட்ராய்டு மொபைல் அனுப்ப அந்த நபர் முகவரி கேட்க, அதனையும் கொடுத்துள்ளார். அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்ட பிறகு, அழைப்பின் அதே நாளில் அந்தப் பெண்ணுக்கு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கிடைத்தது. 


அந்த மொபைல் போனில் டாட் செக்யூர் மற்றும் செக்யூர் என்வாய் அதென்டிகேட்டர் என இரண்டு செயலிகள் ஏற்கனவே நிறுவபட்டிருந்திருக்கிறது. தொலைபேசியைப் பெற்ற பிறகு, மோசடி செய்பவர் அந்தப் பெண்ணிடம் தனது சிம் கார்டை புதிய தொலைபேசியில் செருகவும், கிரெடிட் கார்டைச் செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க வழிமுறைகளைப் பின்பற்றவும் கூறினார்.


ரூ.7 லட்சம் ரூபாய் மோசடி


அந்த பெண், மோசடி செய்பவர் சொன்னதை பின்பற்றினார். மொபைலில் ஆக்டிவேட் ஆன பிறகுதான் கிரெடிட் கார்டில் இருந்து 7 லட்சம் வாங்கிய செய்தி வந்தது. பெங்களூரில் உள்ள நகைக்கடையில் இருந்து இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. செய்தி வந்தவுடன், அவர் மோசடியை உணர்ந்தார். வங்கி மூடப்பட்டதால் மோசடி நடைபெற்ற நாளில் பரிவர்த்தனையை அந்த பெண்ணால் சரிபார்க்க முடியவில்லை. அடுத்த நாள் மோசடி குறித்து புகார் அளித்தார். அவர் வங்கியை தொடர்பு கொண்டு பின்னர் கந்தேஷ்வர் போலீசில் வழக்கு பதிவு செய்தார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை EMI ஆக மாற்றுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ