பெண்களை பொருத்தமட்டில், தங்களுடைய துணிகள் எந்த ஒரு பணிக்கும் ஏதுவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவர், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுகையில் இவ்வாறு உணர்வதுண்டு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏனெனில் பெரும்பாலன பெண்களின் ஆடைகள், அந்த சூழ்நிலையில் சற்று சிரமத்தினையே ஏற்படுத்தி வருகின்றன, இந்த பிரச்சனையின் கலையும் வகையில் பிரபல T-Shirt நிறுவனமான GAP தாய்மார்களுக்கான புதுவித T-Shirt-னை வடிவமைத்துள்ளது.


இந்த T-Shirt குறித்த விளம்பரம் ஒன்றினையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்த விளம்பரத்திற்கு மக்களின் மத்தியில் குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.



இந்த விளம்பரத்தில் காமம் இல்லை, தன் குழந்தையின் மீதான ஓர் தாயின் அன்பு மட்டுமே வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. 


அம்மாவின் அன்பு GapBody உடன் என்னும் வரிகள் கொண்டு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விளம்பரத்தினை GAP நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த பதிவிற்கு மக்கள் பலரும் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்!