2023, ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில், பல்வேறு நிதி விதிகளில் அதிலும் குறிப்பாக காப்பீட்டுத் துறையின் விதிகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  காப்பீட்டு துறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது ஒரு குறிப்பிட்ட வகை காப்பீட்டு பிரீமியத்தின் மீதான வரி விலக்குகளை நீக்குவது ஆகும்.  இதுதவிர இன்னும் கூடுதலாக காப்பீட்டு செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  முன்னர் அதிக பிரீமியம் கொண்ட பாலிசிகளுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயமில்லை, ஆனால் இப்போது இந்த ஆண்டு முதல் அதிக பிரீமியத்துடன் பாலிசிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜாக்பார்ட்! 44 சதவீதம் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்?


புதிய விதிகளின் மூலம் பாலிசிதாரர்கள் ஆண்டுதோறும் ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான பிரீமியம் தொகைகளுக்கு வரி செலுத்த வேண்டும்.  இதுதவிர இந்த நிதியாண்டில் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்களுக்கு (யுலிப்கள்) புதிய வருமான வரி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான யூலிப் பிரீமியங்களில் வரி விலக்கு நன்மைகள் கிடைக்கப்பெறும்.  இன்சூரன்ஸ் ரெகுலேட்டரான ஐஆர்டிஏஐ, நிர்வாகச் செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பை மாற்றி ஒரே நாளில் நடைமுறைப்படுத்தியுள்ளது.  ஐஆர்டிஏஐ தனது விதிகளை மாற்றும் போது காப்பீட்டு முகவர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்கான கமிஷன் வரம்பை நீக்க முடிவு செய்துள்ளது.



முன்னர் ஐஆர்டிஏஐ மொத்த செலவில் கமிஷன் 20 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கூறி பின்னர் இந்த வரம்பை நீக்கியது.  தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி கமிஷன் தொகையை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.  காப்பீட்டுத் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களுடன், மேலும் சில புதிய விதிகளை பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


மேலும் படிக்க | நீங்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் உண்டா? தெரிஞ்சுக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ