UPIல் புதிய மாற்றம்! இனி 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப முடியாது!
ஆன்லைன் மோசடியை தடுக்க முதல் முறை பணம் அனுப்பும் போது ரூ. 2,000க்கு மேல் ஆன்லைன் வழியாக அனுப்ப முடியாது என்ற புதிய நடைமுறையை அரசு கொண்டுவர உள்ளது.
ஆன்லைனில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் UPI சம்பந்தமாக மோசடிகள் அதிகரித்து வருகிறது. இப்படி இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் UPI ஐடிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசாங்கம் விரும்புகிறது. இந்நிலையில், இந்த மோசடிகளை தடுக்க முதல் முறையாக பணம் அனுப்பும் போது ரூபாய் 2,000 க்கு மேல் அனுப்ப முடியாது. இரண்டு பயனர்களுக்கு இடையே முதல் முறை பரிவர்த்தனை செய்த பிறகு நான்கு மணிநேரத்திற்கு பிறகே மீண்டும் பணம் அனுப்ப முடியும் என்ற நடைமுறையை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ரூ.2,000க்கு மேல் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இரண்டு பயனர்களுக்கு இடையேயான முதல் பரிவர்த்தனைக்கு பிறகு நான்கு மணிநேர காத்திருப்பு நேரத்தை உருவாக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த புதிய முறை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மட்டுமின்றி, உடனடி கட்டண சேவை (ஐஎம்பிஎஸ்) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) போன்ற பிற டிஜிட்டல் கட்டண முறைகளையும் உள்ளடக்கும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பெண்களுக்கான ஜாக்பாட் ஓய்வூதியத் திட்டங்கள்.. டபுள் லாபம் அள்ளலாம், உடனே படிக்கவும்
தற்போது, ஒரு பயனர் புதிய UPI கணக்கை உருவாக்கினால், முதல் 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ரூ. 5,000 அனுப்ப முடியும். நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் (NEFT) விஷயத்தில், ஒரு பயனர் ரூ. 50,000 (முழுமையாக அல்லது பகுதிகளாக) 24 மணிநேரத்தில் மாற்றி கொள்ளலாம். இருப்பினும், இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரு பயனர் இதுவரை பரிவர்த்தனை செய்யாத மற்றொரு பயனருக்கு ரூ. 2,000க்கு மேல் முதல் முறை அனுப்ப முடியாது. 4 மணி நேரத்திற்கு ஒரு நாளின் அனுமதிக்கப்பட்ட தொகையை மாற்றி கொள்ளலாம். முதல் முறையாகப் பயனருக்குச் செலுத்திய கட்டணங்களை மாற்றியமைக்க அல்லது மாற்றுவதற்குப் பயனருக்கு நான்கு மணிநேரம் இருக்கும். இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பொது மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று (நவம்பர் 28) நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்து உள்ளன.
இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகள்:
ரிசர்வ் வங்கியின் 2022-23 ஆண்டு அறிக்கையின்படி, மோசடிகளின் எண்ணிக்கை 13,530 ஆகவும், அதன் மொத்தம் தொகை 30,252 கோடி ரூபாய் ஆகவும் இருந்தது. இதில், கிட்டத்தட்ட 49% அல்லது 6,659 வழக்குகள் டிஜிட்டல் பேமெண்ட், கார்டு/இன்டர்நெட் வகையைச் சேர்ந்தவை. இந்த ஆண்டு, இணைய மோசடி காரணமாக ஏற்படும் நிதி இழப்பைத் தடுப்பதற்கான தேசிய ஹெல்ப்லைன் 155260 மற்றும் புதிய தளத்தை இந்திய அரசு நிறுவியது. இந்த ஹெல்ப்லைன் மற்றும் வெப்சைட் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் (I4C) செயல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த புதிய நடைமுறை ஒரு பயனருக்கு இன்னொன்று பயனருக்கு இடையே மட்டும் இருக்கும் என்றும் பெட்ரோல் பங்க், உணவகங்கள், மளிகைக் கடைகள், துணி கடைகள் போன்றவற்றில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ