2022-ல் தோல்வியை வெற்றியாக மாற்ற எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ராசிகளின் குணாதிசயங்களையும் விவரித்து, அவர்களின் நன்மை தீமைகளும் சொல்லப்பட்டுள்ளன.
Horoscope 2022: ஒவ்வொரு மனிதனிடமும் சில குறைபாடுகள் இருக்கும். பல சமயங்களில் இந்த குறைபாடுகள் அவரை முன்னேற விடாமல் தடுக்கின்றன. அந்த குறைபாடுகளை விரைவில் கண்டறிந்து நீக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து ராசிகளின் (Zodiac Signs) குணாதிசயங்களையும் விவரித்து, அவர்களின் நன்மை தீமைகளும் சொல்லப்பட்டுள்ளன. புத்தாண்டு தொடங்கும் முன் நமக்கான குறைபாடுகளை அறிந்து நாம் நீக்கிவிட்டால், வரவிருக்கும் புத்தாண்டில் நாம் அனைத்து நலன்களையும் பெறுவதை யாரும் தடுக்க முடியாது.
உங்கள் ராசியில் உள்ள குறைபாடு என்ன?
மேஷம் (Aries): இந்த ராசிக்காரர்களுக்கு மிக விரைவாக பிறர் மீது பொறாமை உணர்வு ஏற்படும். அத்தகைய இயல்பு அவரை ஒரு சக வீரராக தோல்வியடையச் செய்கிறது. இந்த பழக்கத்தை 2022-ல் மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி செய்தால், உங்கள் புகழ் கூடும், வெற்றியும் கிடைக்கும்.
ரிஷபம் (Taurus): இந்த ராசிக்காரர்கள் பண ஆசை உள்ளவர்கள். அனைத்தையும் பணத்தால் அளக்க நினைப்பவர்கள். 2022ல் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். பணம் இருப்பதை காட்டிக் கொள்வதை விட சேமிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
மிதுனம் (Gemini): இந்த ராசிக்காரர்கள் மனிதர்களை மதிப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். இது தவிர, அவர்கள் எப்போதும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதும் தவறை செய்கிறார்கள். இதற்காக அவர்கள் சில நேரங்களில் மற்றவர்களை அவமானப்படுத்துகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் பிறரிடம் இருந்து விலகி இருப்பதைத் தவிர்க்க விரும்பினால், புத்தாண்டில் இந்த பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
கடகம் (Cancer): கடக (Cancer) ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். தாங்கள் தனிமையாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் இவர்க்ள். இதனால், அவர்கள் எப்போதும் அச்சத்தில் இருப்பதுண்டு. 2022ல், உங்களின் இந்த பயத்தை நீக்கிவிட்டு, தயங்காமல் முன்னேறுங்கள்.
சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்கள் அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்களைத் தாங்களே மேல் வைத்துக் கொள்கிறார்கள். இது தவிர, கோபமும் ஈகோவும் அவர்களின் வெற்றிக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன.
கன்னி (Virgo): கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் நினைப்பதை செய்யும் எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களின் மதிப்புமிக்க அறிவுரைகளை காதில் வாங்கிக் கொள்வதில்லை. சில சமயங்களில் அதன் காரணமாக பெரும் நஷ்டத்தை அடைகிறார்கள். 2022-ல் உங்களின் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவது பல இழப்புகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
துலாம் (Libra): துலா ராசிக்காரர்களுக்குக் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கெட்ட பழக்கம் இருக்கும். இதனால் பல சமயங்களில் மக்கள் அவர்கள் மீது எரிச்சல் அடைகின்றனர். இந்த தீய பழக்கத்தை 2022-ல் விட்டுவிட வேண்டும்.
ALSO READ | Rasi: ஒருவருக்கு ஒன்றல்ல, 3 ராசிகள் உள்ளன! எது எந்த நேரத்தில் செயல்படும் தெரியுமா?
விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களுக்கு மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிக்கும் கெட்ட பழக்கம் இயல்பாகவே இருக்கும். இதைத் தவிர, மக்களைத் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்துவது அவர்களின் பொழுது போக்கு. இதன் காரணமாக, மக்கள் அவர்களிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்குகிறார்கள். 2022-ல் இந்த இரண்டு கெட்ட பழக்கங்களையும் கைவிடுங்கள். இல்லையெனில் உற்றார் உறவினர் உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.
தனுசு ராசி (Sagittarius): தனுசு ராசிக்காரர்களுக்கு, பொய் சொல்லும் பழக்கம் உள்ளது. சில சமயம் தெரியாமலும் பொய் சொல்கிறார்கள். 2022ல் இந்தப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.
மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை பார்த்து பொறாமை படும் பழக்கம் உள்ளது. இதை தவிர்ப்பது மிக அவசியம். மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பது வாழ்க்கையிலும் அதிக மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம் (Aquarius): உங்கள் இலக்கை அடைய கடினமாக உழைப்பது நல்லது. ஆனால் நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது தவறு. கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பெரும் பலன் கிடைக்கும்.
மீனம் (Pisces): கனவு காண்பது ஒன்று, எண்ணங்களில் மூழ்குவது வேறு. மீன (Pisces) ராசிக்காரர்கள் இந்த வேறுபாட்டை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு நல்லது. மேலும், 2022ல் ஈகோவை விட்டுவிடுங்கள், அது உங்களுக்கு பெரிய வெற்றியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் ராகு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR