Horoscope 2021 December 16: இந்த ராசிக்காரர்கள் இன்று மகத்தான செல்வத்தை சம்பாதிப்பார்கள்

பேச்சுத்துறையில் உள்ளவர்களுக்கு வியாழக்கிழமையான இன்று நல்ல நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும், தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 06:32 AM IST
Horoscope 2021 December 16: இந்த ராசிக்காரர்கள் இன்று மகத்தான செல்வத்தை சம்பாதிப்பார்கள் title=

புதுடெல்லி: பேச்சுத்துறையில் உள்ளவர்களுக்கு வியாழக்கிழமையான இன்று நல்ல நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும், தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும்.

மேஷம்: வாழ்வில் பொன்னான தருணங்களைக் கொண்டு வரப் போகும் நாள் இது. புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் காரியம் கைகூடும்.  தொழில் முன்னேற்றம் தொடர்பாக குடும்பத்தினருடன் கலந்து ஆலோசிப்பீர்கள். மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நல்ல நாள் இன்று.

ரிஷபம்: சில பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகளின் மூலம் கிடைத்த பணத்தால் உங்கள் நிதி நிலை வலுப்பெறும். இறைவனை வழிபடுவதில் மன உறுதி ஏற்படும். இல்லற வாழ்வில் அன்புடனும் புரிதலுடனும் காதல் வாழ்க்கையும் களைகட்டும். 

மிதுனம்: உங்கள் ஆளுமை அனைவரையும் ஆக்ரமிக்கும். திறமை மற்றும் உழைப்பை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கடகம்: உங்கள் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து உங்கள் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். எழுத்தாளர்களுக்கு நல்ல செய்திகள் வரும். நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தவும். பெற்றோர் கூறும் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

சிம்மம்: உங்கள் பேச்சு உங்களுக்கு வரப்பிரசாதம். ஆடை வியாபாரிகளுக்கு விரக்தியான நாளாக அமையும். விரைவான லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான வழிகளைக் கையாளாதீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும். பெண்கள் வீட்டை சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள்.

கன்னி: சில புதிய மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலையில் கொஞ்சம் தீவிரத்தைக் காட்டுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

ALSO READ |குருவின் ராசி மாற்றத்தால் வெற்றி மழை பொழியும்

துலாம்: சற்று மந்தமாகவே இன்றைய நாள் தொடங்கினாலும், பிறகு சூடு பிடிக்கும். பணியில், உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை (Beware in Financial Matters);மொத்த வியாபாரிகள் சற்று கவனமாக செயல்படவும்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். பரிசுகள் மற்றும் கெளரவம் கிடைக்கும். பணியிடத்தில், உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, வீண் செலவுகளை நிறுத்த வேண்டும். இன்று, மோதல் போக்குக் உங்களுக்கு பயனளிக்காது.

தனுசு: உங்கள் எண்ணங்கள் மேம்படும். தொழில் திட்டங்களை உற்சாகமாக முடிப்பீர்கள். பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இளைஞர்கள் தொழிலில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவார்கள். திருமண பேச்சுவார்த்தை வெற்றியாக நடைபெறும்.

மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணம் சம்பந்தமாக மனதில் பலவிதமான எண்ணங்கள் வரலாம். வியாபாரத்தை அதிகரிக்க புதிய வழிகளை யோசிப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு சாதகமாக நாள் இன்று. அதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம்.

கும்பம்: உங்களின் நட்சத்திரங்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றன. வருமானம் அதிகரிக்கும், திடீரென வரும் வேலைகளால், திட்டமிடப்பட்ட வேலைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணைக்கு பரிசு கொடுப்பதாக உறுதியளிக்க வேண்டியிருக்கலாம்.

மீனம்: வியாபாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை தீர்க்க நல்ல நேரம். சில புதிய நபர்களை சந்திப்பீர்கள், அது உங்களுக்கு நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டம் போடலாம். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும்.

READ ALSO | திமிங்கலத்தை வழிபடும் இந்தியக் கோவில்! 300 ஆண்டுகள் பராம்பரிய ஆலயம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News