Budget 23-24: நிதியமைச்சர் நிறைவேற்றாத சாமானியர்களின் PPF எதிர்பார்ப்புகள்
PPF And Union Budget 2023-24: மக்களின் பல எதிர்பார்ப்புகளை, இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகளின் பிரதானமாது பிபிஎஃப் அறிவிப்பு
பட்ஜெட்டில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகள்: மக்கள் இந்த முறை பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். மக்களின் பல எதிர்பார்ப்புகளை, இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகளின் பிரதானமாது பிபிஎஃப் அறிவிப்பு. பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இம்முறை பட்ஜெட்டில் பிபிஎப் திட்ட வரம்பை உயர்த்தி அறிவிப்பு வெளியாகலாம் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
PPF-ல் பணம் போட்டவர்களுக்கு அதிர்ச்சி
இம்முறை இந்த ஆண்டின் பட்ஜெட் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்ததை அறிந்த மத்திய அரசின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளையும் மேற்கொண்டது. அதே நேரத்தில், பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF திட்டம் தொடர்பான அறிவிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | Budget 2023-24 பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
மத்திய அரசால் நடத்தப்படும் பிபிஎப் திட்ட வரம்பை உயர்த்தி அறிவிப்பு வெளியாகலாம் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். என்றாலும் மக்களின் எதிர்பார்ப்பு கானல்நீராகிவிட்டது.
PPF வட்டி விகிதம் உயரவில்லை
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்று பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் எதிர்பார்த்தனர்.
PPF உடன் ஒப்பிடும்போது, வங்கி FD சேமிப்புக்கு குறிப்பிடத்தக்க வட்டியை அளிக்கிறது. இதனால்தான் பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், பிபிஎஃப்-ல் பெறப்படும் வட்டி FD-ஐ விட அதிகமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
பிபிஎஃப் முதலீடு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பட்ஜெட் உரையில் PPF தொடர்பாக எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. தற்போது, PPFல் முன்பு இருந்த அதே பலன், எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஒரு நிதியாண்டில் PPF இல் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சமாக மட்டுமே இருக்கும்.
வரி விலக்கு
இது தவிர, தற்போது PPFக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், PPF திட்டத்தில் கிடைக்கும் வரிச் சலுகையும் முன்பு போலவே இருக்கும், மேலும் மக்கள் முன்பு போலவே PPF திட்டத்தில் இருந்து வரி விலக்கு பெற முடியும்.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ