வடக்கு கரோலினா பகுதியில் உணவகம் ஒன்றில் வேலைபார்க்கும் மாணவிக்கு ₹ 7 லட்சம் tip கிடைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலக்கட்டத்தில் திரைப்படங்கள் வாயிலாக பிரபலம் ஆவோரை காட்டிலும் YouTube வாயிலாக பிரபலம் ஆவோர் தான் அதிகம். அந்த வகையில் தனது தொடர்சியான வீடியோக்களால் YouTube மூலம் பிரபலமானவர் Mr Beast,. 


இவர் கடந்த ஞாயிறு அன்று வடக்கு கரோலினாவில் உள்ள Sup Dogs உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வெயிட்டராக வேலைப்பார்க்கும் கஸ்டர் என்பவரிடம் 2 தண்ணீர் பாட்டில்களை ஆடர் செய்துள்ளார். பின்னர் ஓட்டலை விட்டு வெளியேறுகையில் தான் வாங்கிய பொருளுக்கு கட்டணத்தை செலுத்தும் விதமாக $10,000 டாலர்களை மேசையில் வைத்து சென்றுள்ளார். இந்திய மதிப்பில் ₹ 7 லட்சம் ஆகும்.


Mr Beast வாங்கிய பாட்டில்களின் விலையினை இந்த பணத்தில் கழித்தாலும் நிகராக ₹ 7 லட்சம் மதிப்பிலான பணம் டிப்ஸ் மிஞ்சியுள்ளது. இந்த டிப்ஸ் ஆனது அவருக்கு தண்ணீர் பாட்டிலினை சர்வ் செய்த கஸ்டர்-க்கே சேரும்.


இரண்டு பாட்டில் தண்ணீரினை சர்வ் செய்ததற்காக இவருக்கு ₹ 7 லட்சம் மதிப்பிலான டிப்ஸ் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இது போலியான பணமாக இருக்கலாம், தன்னை Prank செய்வதற்காக சிலர் இவ்வாறு செய்திருக்கலாம் என என்னிய கஸ்டர், பின்னர் இது தனக்கான பணம் என்பதினை அறிந்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.



இந்த சம்பவத்தினை குறித்து Sup Dogs முகப்புத்தகத்தின் வாயிலாக உலகிற்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கஸ்டர் தெரிவிக்கையில்... எனது கல்லூரி படிப்பின் செலவிற்காகவே Sup Dogs-ல் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகின்றேன். இந்த டிப்ஸ் எனது படிப்பு செலவிற்கு பெரிதும் பயன்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், Mr Beast,.-ன் பெயர் இணையபிரியர்களால் மேலும் பாராட்டப்பட்டு வருகிறது!