Bank Holidays: நவம்பரில் வங்கிகள் விடுமுறை குறித்த முழு விபரம் உள்ளே!
நவம்பர் மாதத்தில் உங்கள் வங்கி கிளைக்குச் செல்வதற்கு முன், வங்கிகள் மூடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்கள் குறித்த விபரங்களை அறிந்து கொண்டால், வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகளை சிறந்த முறையில் திட்டமிடலாம்.
புதுடெல்லி: நவம்பர் மாதத்தில் உங்கள் வங்கி கிளைக்குச் செல்வதற்கு முன், வங்கிகள் மூடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்கள் குறித்த விபரங்களை அறிந்து கொண்டால், வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகளை சிறந்த முறையில் திட்டமிடலாம்.
மூன்று பிரிவுகளின் கீழ் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விடுமுறை அளிக்கிறது. அவை Negotiable Instruments Act சட்டத்தின் கீழ் விடுமுறை, Negotiable Instruments Act மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, மூன்றாவதாக வங்கிகளின் கணக்குகளை முடிப்பதற்கான விடுமுறை என மூன்று வகைப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியலின் அடிப்படையில், 2021 நவம்பர் மாதத்தில், கீழ்கண்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், ஆனால் ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும்.
ALSO READ: Buy Now Pay Later: பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம்
ரிசர்வ் வங்கி (RBI) விடுமுறை நாட்காட்டி பட்டியலின் படி நவம்பர் மாதத்தில் வங்கிகள் மொத்தமாக வார இறுதி நாட்கள் உட்பட 17 நாட்களுக்கு மூடப்படும்
இருப்பினும், வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் வேறுபடும் என்பதோடு அனைத்து வங்கி நிறுவனங்களும் இவை அனைத்தையும் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் பிற நிகழ்வுகளை பொறுத்தது.
நவம்பர் 2021 மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் இங்கே. பட்டியலைப் பார்க்கவும்.
வங்கி விடுமுறை விபரம்
கன்னட ராஜ்யோஸ்தவா: நவம்பர் 1
நரக சதுர்தசி: நவம்பர் 3
தீபாவளி அமாவாசை (லக்ஷ்மி பூஜன்)/தீபாவளி/காளி பூஜை: நவம்பர் 4
தீபாவளி /விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/கோவர்தன் பூஜை: நவம்பர் 5
பாய் துஜ்/சித்ரகுப்த ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை/தீபாவளி: நவம்பர் 6
சத் பூஜை/சயன் அர்த்யா: நவம்பர் 10
சத் பூஜை: நவம்பர் 11
வாங்கலா திருவிழா: நவம்பர் 12
குரு நானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா: நவம்பர் 19
கனகதாச ஜெயந்தி: நவம்பர் 22
செங் குட்ஸ்னெம்: நவம்பர் 23
மேற்கண்ட வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
இதுதவிர, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் பின்வரும் தேதிகளில் வருகின்றன:
நவம்பர் 7 - ஞாயிறு
நவம்பர் 13- மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
நவம்பர் 14- ஞாயிறு
நவம்பர் 21- ஞாயிறு
நவம்பர் 27- மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
நவம்பர் 28- ஞாயிறு
ALSO READ: Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV
மாநில அரசு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களின்படி குறிப்பிடப்பட்ட நாட்களின் விடுமுறைகள் அந்த அந்த மாநிலங்களில் அனுசரிக்கப்படும், இருப்பினும் பொது விடுமுறை நாட்களில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படிருக்கும்.
இந்த விடுமுறை நாட்களை நீங்கள் கவனத்தில் கொண்டால், வங்கி பரிவர்த்தனை நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிட முடியும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR