National Pension Scheme: முதுமை காலத்திற்கான நிதி பாதுகாப்பு மிகவும் அவசியம் என்ற நிலையில், முதுமை காலத்திற்கான நிதியை சேமிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது நீங்கள் ஓய்வூதியம் இல்லை என கவலைப்படத் தேவையில்லை. ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்ய விரும்பினால், தேசிய ஓய்வூதியத் திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த வழி. ஓய்வூதியத் திட்டத்தில் சரியான காலத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுபெறும் போது உங்களிடம் 34 லட்சம் ரூபாய் வரை நிதி இருக்கும். இதற்கு அதிக முதலீடு தேவையில்லை, தினமும் 50 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்தால் போதும். இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினசரி ரூ.50 முதலீட்டில் ரூ.34 லட்சம் கிடைக்கும்


1. முதலீடு தொடங்கும் வயது - 25 ஆண்டுகள்


2. NPS இல் மாதாந்திர முதலீடு - ரூ 1,500


3. முதலீட்டு காலம் - 35 ஆண்டுகள்


4. 35 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்த பணம் - 6.30 லட்சம்


5. முதலீட்டுத் தொகையில் பெறப்பட்ட மொத்த வட்டி - 27.9 லட்சம்


6. ஓய்வூதியத்தின் போது கிடைக்கும் மொத்த வைப்புத்தொகை - 34.19 லட்சம்


7. இதன் கீழ் மொத்த வரி சேமிப்பு - 1.89 லட்சம்.


ALSO READ | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வங்கியும் FD வட்டி விகிதத்தை அதிகரித்தது


ஓய்வு பெறும் போது கிடைக்கும் தொகை


இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, நீங்கள் ஓய்வுபெறும் வயது வந்ததும், உங்கள் முதலீட்டில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம். அதாவது, ஓய்வுபெறும் போது ரூ.20.51 லட்சத்தை எடுக்கலாம். இந்த வகையில், இந்த திட்டம் உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும்.


கிடைக்கும் வட்டி தொகை


இதற்குப் பிறகு, மீதமுள்ள தொகையை ஆண்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிலையான ஓய்வூதியமாகப் பெற பயன்படுத்தலாம். 8 சதவீத வட்டியை அரசு கொடுத்தால், மாதம் 9,000 ஓய்வூதியம் பெறலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் முழுமையாக திரும்பப் பெற முடியாது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 60 சதவீதத் தொகையை மட்டுமே எடுக்க முடியும், மீதமுள்ள 40 சதவீதத்தை நீங்கள் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR