புதுடெல்லி: கடந்த சில நாட்களாக நாட்டின் பெரிய தனியார் மற்றும் அரசு வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. வங்கிகளின் நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகும்.
இதற்காக, வங்கிகள் சார்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று ஆண்டுகளுக்கான எஃப்.டி.க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை, HDFC வங்கி, SBI மற்றும் கனரா வங்கியைத் தொடர்ந்து, ICICI வங்கியும் நிலையான வைப்பின் (Fixed Deposit) இன் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.
90 நாட்களுக்கான மெச்யூர்ட்டியில் இந்த வட்டி விகிதம் இருக்கும்
ஐசிஐசிஐ வங்கியால் (ICICI Bank) செயல்படுத்தப்படும் எஃப்டியின் புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 20, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. வங்கியின் இணையதளத்தின்படி, ஐசிஐசிஐ வங்கி இப்போது 7 முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 2.50 சதவீத வட்டி விகிதத்தையும், 30 முதல் 90 நாட்கள் முதிர்வு கொண்ட FD-களுக்கு 3 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
ALSO READ | Fixed Deposit: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, FD Lock-in கால அளவில் விரைவில் மாற்றம்?
10 ஆண்டுகள் வரையிலான மெச்யூரிடிக்கான FD விகிதம்
இதேபோல், 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான முதிர்வு கொண்ட FD-களுக்கு, 3.5 சதவீத வட்டியும், 185 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலவரையறை கொண்ட FD-களுக்கு 4.40 சதவீதம் வட்டியும் (Interest Rate) வழங்கப்படுகிறது. ஒரு வருடம் முதல் 389 நாட்கள் வரையிலான FD-களில் 5 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD-களுக்கு வங்கி 5.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான FD விகிதம்
மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டியை வங்கி அளிக்கின்றது. இதன் கீழ், இப்போது 7 முதல் 29 நாட்கள் முதிர்வு உள்ள டெபாசிட்டுகளுக்கு 3 சதவீத வட்டி விகிதமும், 30 முதல் 90 நாட்கள் முதிர்வு உள்ள எஃப்டிகளுக்கு 3.50 சதவீத வட்டியும் வழங்கப்படும். 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4 சதவீத வட்டி விகிதமும், 185 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலவரையறை கொண்ட FD-களுக்கு 4.90 சதவீதமும், ஒரு வருடம் முதல் 389 நாட்கள் வரையிலான FD-களுக்கு 5.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகின்றது.
ALSO READ | SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR