நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்
Budh Margi in Taurus 2022: செல்வம், புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், வியாபாரம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகமான புதன் ஜூன் 3 முதல் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகப்போகிறார்.
புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் பணம், வணிகம் போன்ற முக்கிய அம்சங்களை பாதிக்கும். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வரும் புதன் 2022 ஜூன் 3 ஆம் தேதி பின்னோக்கி நகர்வார். ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்ரமாவார். எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும். ரிஷப ராசியில் புதன் நேரடியாக சஞ்சரிப்பது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சிறப்பான பலன்கள் உண்டு. மேலும், புதனின் இந்த பிற்போக்கு நகர்வு எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் புதன் சஞ்சரிப்பது சாதகமாகும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் இருப்பதால் பல நன்மைகள் உண்டாகும். இந்த மாற்றம் அவர்களின் வாழ்வில் பொன்னான நாட்களை கொண்டு வரும் என்றே கூறலாம். பெரிய வெற்றி கிடைக்கும். பழைய வழக்குகள் தீரும். கையில் போதுமான பணம் இருந்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்
ரிஷபம்: ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் புதன் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருவார். வேலையில் ஒன்றன் பின் ஒன்றாக விரைவான வெற்றிகள் கிடைக்கும். சில பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். போட்டித் தேர்வில் கலந்துகொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் அதிர்ஷ்டத்தை தருவார். தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவார். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்: துலாம் ராசியின் புதன் சஞ்சாரம் தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றியைத் தரும். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு அது கைகூடும். வேலை மாற விரும்புபவர்களின் ஆசையும் இந்த மாதம் நிறைவேறும். முதலீட்டாளர்கள் ஆதாயம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: புதன் சஞ்சரிக்கும் போதே விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பு பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த ராசி வியாபாரிகளுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR