Ola Electric Scooter: 10 அழகிய வண்ணங்களில் கலக்க வருகின்றன ஓலா ஸ்கூட்டர்கள்!!
ஓலா எலக்ட்ரிக் வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஓலா எலக்ட்ரிக் வியாழக்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனது மின்சார ஸ்கூட்டர் 10 தனித்துவமான மற்றும் துடிதுடிப்பான வண்ணங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிக விரைவில் நடக்கவிருக்கும் ஓலா ஸ்கூட்டர் (Electric Scooter) Scooter) அறிமுக விழாவில் இந்த வண்ணங்களின் துல்லியமான பெயர்கள் அறிவிக்கப்படும். நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இருந்து மேட் மற்றும் பளபளப்பான ஷேட்களில் நிறத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலும், சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களிலும் துடிப்பான ஷேட்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
ஓலாவின் தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வாலின் ட்வீட்டில் முதல் முறையாக, ஓலா எலக்ட்ரிக் இன்று முழு வண்ண வகைகளைப் பற்றியும் வெளிப்படுத்தியது. பவிஷ் அகர்வால் இதை “10 வண்ணங்களில் ஒரு புரட்சி" என்று வர்ணித்துள்ளார்.
ALSO READ: Ola Electric Scooter: நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளருக்கு ஹோம் டெலிவரி செய்யும்!!
ஓலா மின்சார ஸ்கூட்டரின் (Ola Electric Scooter) விலையைப் பற்றிய எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. வரும் நாட்களில் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை நிறுவனம் முன்பதிவுகளைத் துவக்கிய பிறகு, முதல் 24 மணி நேரத்தில் ஓலா ஸ்கூட்டர் 1 லட்சம் முன்பதிவுகளை பதிவு செய்தது. Olaelectric.com இல் தங்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு ரீஃப்ண்டபிள் டெபாசிட்டாக ரூ .499-ஐ செலுத்தி முன்பதிவு செய்யும் நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஹோம் டெலிவரி அளிக்கப்படும்.
மின்சார இரு சக்கர வாகன் துறையில் முன்னோடியாக இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள், Ola Futurefactory என்ற உலகின் மிகப்பெரிய தொழிற்சலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த தொழிற்சலை அதி நவீன வசதிகளோடு தமிழகத்தில் 500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் செயல்படும்.
ஓலா (Ola) எலக்ட்ரிக் முதல் கட்ட உற்பத்தியில், 2 மில்லியன் வருடாந்திர திறனுடன் மிக விரைவில் செயல்பட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது 10 மில்லியனாக அதிகரிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR