Ola Company: IPO-வுக்கு முன்னர் குவியும் முதலீடு, அசத்தும் ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் சமீப காலங்களில் இந்தியாவில் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது இந்த நிறுவனம் அதிக அளவு முதலீடுகளையும் பெற்று வருகின்றது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2021, 07:00 PM IST
  • ஓலா நிறுவனம் பவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பாட்டி ஆகியோரால் 2011 இல் நிறுவப்பட்டது.
  • ஓலா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கேப் சேவைகளை வழங்குகிறது.
  • இந்த சந்தைகளிலும் ஓலா நிறுவனம் ஊபர் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.
Ola Company: IPO-வுக்கு முன்னர் குவியும் முதலீடு, அசத்தும் ஓலா நிறுவனம் title=

ஓலா நிறுவனம் சமீப காலங்களில் இந்தியாவில் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வரும் ஒரு நிறுவனமாகும். அதன் ஐ.பி.ஓ வெளிவரும் சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், அதற்கு முன்னதாக,  டெஸ்மாக், வார்பர்க் பின்கஸ் இணை பிளம் வூட் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோரிடமிருந்து நிறுவனம் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,733 கோடி ரூபாய்) முதலீட்டைப் பெற்றுள்ளது.

இந்திய நுகர்வோர் இணைய தளத்தில், இந்த நிதி அமைப்புகள் செய்துள்ள மிகப்பெரிய முதலீடாகும் இது என்று ஒரு வணிக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஓலா (Ola) தன் வணிகத்தை பல்வேறு இடங்கள் மற்றும் துறைகளில் விரிவுபடுத்தும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

“கடந்த 12 மாதங்களில், நாங்கள் எங்கள் வணிகத்தை மிகவும் வலுவான, நெகிழ்மைத்தன்மை வாய்ந்த மற்றும் திறமையான வர்த்தகமாக மாற்றியுள்ளோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

“ஊரடங்குக்குப் பிறகு, நிறுவனம் மிகவும் நேர்த்தியான முறையில் மீண்டு வந்துள்ளது. மேலும், நிறுவனம், தனது கவனத்தை பொதுப் போக்குவரத்திலிருந்து மாற்றி பிற துறைகளிலும் விரிவுபடுத்தியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு நகர்ப்புற இயக்க தேவைகளைப் பயன்படுத்த நாங்கள் முழு முனைப்புடன் உள்ளோம்” என்று ஓலா தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) கூறினார்.

ALSO READ: Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்

நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியில் புதிய கூட்டாளர்களுடன் சேர்ந்து பணி புரிய ஆவலோடு காத்திருப்பதகாவும் அகர்வால் தெரிவித்தார். 

இருப்பினும், நிறுவனம் அதன் முன்மொழியப்பட்ட ஐபிஓ எப்போது வெளிவரும் என்பது பற்றி இன்னும் குறிப்பிடவில்லை.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதைப் பற்றியும் ஓலா நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது. ஓலா முதலீட்டர்களான சாப்ட் பேங்க், டைகர் குளோபல் மற்றும் ஸ்டீட்வியூ கேபிடல் போன்ற ஓலா முதலீட்டாளர்கள், தங்கள் பங்கை விற்று பங்குதாரர்களுக்கு நிதியை திருப்பித் தர ஐ.பி.ஓ உதவும்.

பவிஷ் அகர்வால் மற்றும் அங்கித் பாட்டி ஆகியோரால் 2011 இல் நிறுவப்பட்ட ஓலா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கேப் சேவைகளை வழங்குகிறது. இந்த சந்தைகளிலும் ஓலா நிறுவனம் ஊபர் (Uber) நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.

ஓலா நிறுவனம் முன்னணி இயக்க தளமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் இணைய தளங்களில் ஒன்றாக இருக்கும் ஓலா நிறுவனம், துடிப்பு மிக்க அதி வேகத்தில் வளரும் வர்த்தகமாக உள்ளது. 

“ஓலாவின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பவிஷ் மற்றும் ஓலா குழுவுடன் இணைந்து உழைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருகிறோம்” என்று வார்பர்க் பிங்கஸில் நிர்வாக இயக்குநரும் இந்தியத் தலைவருமான விஷால் மகாதேவியா தெரிவித்தார்.

ALSO READ: Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News