Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்

ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்த 56 விநாடி டீஸர் வைரலாகியுள்ளது. டீஸரில், நிறுவனம் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2021, 02:55 PM IST
  • ஓலா நிறுவனம், தனது இ-ஸ்கூட்டரின் டீஸரை வெளியிட்டுள்ளது.
  • நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பவிஷ் அகர்வாl இந்த டீசரில் காணப்படுகிறார்.
  • அகர்வால் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர் title=

Ola Electric Scooter: மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா நிறுவனம், தனது இ-ஸ்கூட்டரின் டீஸரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மின்சார வாகன சந்தையில், ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் அதிகமாக உள்ளது. 

நிறுவனமும் அவ்வப்போது இந்த ஸ்கூட்டர் குறித்த புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தற்போது ஓலா நிறுவனம் தனது இ-ஸ்கூட்டரின் (E-Scooter) டீசரை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பவிஷ் அகர்வாலே இந்த டீசரில் காணப்படுகிறார். பெங்களூருவின் சாலைகளில் அவர் இந்த ஸ்கூட்டரை ஓட்டிச்செல்வதைக் காண முடிகின்றது. 

அகர்வால் ட்விட்டரில் பகிர்ந்த 56 விநாடி டீஸர் வைரலாகியுள்ளது. டீஸரில், நிறுவனம் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளது.

பணிச்சூழலியல் இருக்கை (ergonomic seating), உயர் ரக கார்னரிங், கிளாஸ்-லீடிங் அக்சிலரேஷன், இரட்டை எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர், மிகப் பெரிய இன்-கிளாஸ் போட் ஸ்பேஸ் ஆகியவை வீடியோவில் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களாகும்.

ALSO READ: Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!

ஓலா ஸ்கூட்டரின் (Ola Scooter) வேகம், ரேஞ்ச், வீச்சு,திறன், தொழில்நுட்பம் மற்றும் கையாளும் முறை ஆகியவை இதை ஒரு கேம் சேஞ்சராக, அதாவது சந்தையிலேயே மிகச் சிறந்த வாகனமாக மாற்றும் என்று அகர்வால் கூறினார்.

துவக்கத்தில், இந்த ஸ்கூட்டர் கருப்பு நிறத்தில் வெளிவரும். எனினும், வரும் காலங்களில் மேலும் இரு வண்ணங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதற்கான திட்டம் உள்ளது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. 

இதற்கிடையில், பார்குருவில் 500 ஏக்கர் பரப்பளவில் வரும் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஓலா எலக்ட்ரிக் ஃப்யூச்சர் ஃபாக்டரி குறித்த தகவல்களை தெரிவிக்க, அகர்வால் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை (MK Stalin) சந்தித்தார்.

அடுத்த ஆண்டு இந்த தொழிற்சாலை முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, இங்கு, ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இந்த நிலையில், இது உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக இருக்கும். இத்திட்டத்தால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இந்தியா முழுவதும் 1 லட்சம் மின் சார்ஜிங் நிலையங்கள்

இ-ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, நாடு முழுவதும் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது. 

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், 5000 சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும், பின்னர்  இன்னும் அதிக அளவிலான நிலையங்கள் இவற்றுடன் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 36 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யப்பட்டால், குறைந்தபட்சமாக இந்த ஸ்கூட்டர் 150 கி.மீ மைலேஜ்ஜை அளிக்கும்.

ALSO READ: Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News