பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றி சமீபத்திய நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. அரசு எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கு ஒருமுறை விருப்பம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


புதிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) அறிவிக்கப்பட்ட நாளான டிசம்பர் 22, 2003 க்கு முன்னர் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்து, என்பிஎஸ் அமல்படுத்தப்பட்ட 2004-ல்  பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்த மாற்றத்தை தேர்ந்தெடுக்கலாம். NPS 22 டிசம்பர் 2003 அன்று அறிவிக்கப்பட்டது. தகுதியான பணியாளர்கள் 31 ஆகஸ்ட் 2023-க்குள் இந்த ஒரு முறை விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என DoPPW தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம் 


பழைய ஓய்வூதிய திட்டம்


இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். நிர்வாக காரணங்களால் ஆட்சேர்ப்பு செயல்முறை தாமதமானதால், 2004 இல் பணியில் சேர்ந்த மத்திய ஆயுதப்படை (CAPF) பணியாளர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். என்பிஎஸ்-க்கான பணியாளர்களின் பங்களிப்பு தனிநபரின் பொது வருங்கால வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) வரவு வைக்கப்படும்.


ஓய்வூதிய திட்டம்


பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, பழைய ஓய்வூதிய முறையை மீட்டெடுப்பது, அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளன. ஜனவரி 31 நிலவரப்படி, 23,65,693 மத்திய அரசு ஊழியர்களும், 60,32,768 மாநில அரசு ஊழியர்களும் என்பிஎஸ்-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் என்பிஎஸ் செயல்படுத்தப்பட்டது.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பரிசு, அறிவிப்பு எப்போது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ