அழியும் நிலையில் இருந்த அதிசய இனத்தைச் சேர்ந்த தவளைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் இனத்தைச் சேர்ந்த பெண் தவளை ஜோடி கிடைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது...... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொலிவியா நாட்டில் ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ள ‘சேவென்காஸ்’ (Sehuencas) என்ற நன்னீர் வகை தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என கருதப்படுகிறது.
 
உயிரியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்படும் இந்த தவளை அழியும் நிலையில் இருப்பதால், இதற்காக பெண் தவளையை தேடி கண்டுபிடித்து இனப்பெருக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விஞ்ஞானிகள் இருந்தனர். இந்த பணிக்காக சுமார் 15,000 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டப்பட்டது. 


இதுமட்டுமின்றி, இதற்காகவே தனி இணையதளம் ஒன்றை துவங்கி அதில், அந்த ரோமியோ தவளை தனக்கு பெண் வேண்டும் என்று பேசுவது போன்று ஒரு வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டது.



இந்நிலையில், அந்நாட்டு வனப்பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த 4 தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், ‘சேவென்காஸ்’ இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் தவளையும் இருந்தது. இதனால், ரோமியோவுக்கு ஜூலியட் கிடைத்த உற்சாகத்தில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.