ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் ஒரு டோஸுக்கு ரூ.225 செலவாகும் என சீரம் நிறுவனம் தடுப்பூசிக்கான விலையை நிர்ணயித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் சமூக இடைவெளி மற்றும் முழு ஊரடங்கு அமல் படுத்தபட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது கிட்டதட்ட நான்கு தடுப்பூடிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை ரூ.225 க்கு (அதாவது 3 அமெரிக்க டாலர்) வழங்க முடியும். இதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனம், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.


ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் (ChAdOx1) கொரோனா தடுப்பூசி இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனை 2-வது மற்றும் 3-வது கட்டப் பரிசோதனை விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளில் நடந்த கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி நல்ல பலன்களையும், முன்னேற்றத்தையும் அளித்துள்ளன. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருந்து உலகம் முழுவதும் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | Covid-19 India: இதுவரை 14 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; 21 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை


இது குறித்து சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளதாவது.... “இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 92 நாடுகளில் உள்ள மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி எளிதாகக் கிடைக்கும் வகையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளனது.


இதன்படி இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி 3 டாலர் அதாவது 225 ரூபாய்க்கு வழங்க முடியும். இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.1,125 கோடி வழங்குகிறது. இதன் மூலம் 10 கோடி மருந்துகளை நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு சீரம் நிறுவனம் வழங்கும்.


முன்பே, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் இப்போது புதிதாக கவி (gavi) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.  உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தபின், எங்கள் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி தொடங்கிவிடும். இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்" என தெரிவித்துள்ளது.