புது டெல்லி: இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை இன்று 20,88,61 ஐ எட்டியுள்ளது, ஒரு நாளில் 61,537 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று (Coronavirus in India) பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 48,901 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மீட்பு எண்ணிக்கை 13,78,105 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தற்போது 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன ர். அதே நேரத்தில் COVID-19 நோயாளிகளின் மீட்பு விகிதம் 67.62 சதவீதமாக உள்ளது.
நாட்டில் COVID-19 தொற்று 50,000 க்கும் அதிகமாக உறுதி செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. ஒன்பதாவது நாளாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ | COVID தடுப்பூசி குறித்து ‘நல்ல செய்தி’... வைரஸ் வகையில் அதிக மாற்றங்கள் இல்லை..!
கடந்த 24 மணி நேரத்தில் 933 நோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள். மொத்த இறப்பு (Corona Death) எண்ணிக்கை 42,518 ஆக உள்ளது.
ஐ.சி.எம்.ஆர் (ICMR) படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை மொத்தம் 2,33,87,171 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 5,98,778 மாதிரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்யப்பட்டன.
மீட்டெடுப்புகள் மற்றும் செயலில் உள்ள நிகழ்வுகளுக்கு இடையிலான இடைவெளி ஒரு நிலையான உயர்வைக் கண்டது. ஜூன் 10, 2020 அன்று, முதன்முறையாக, மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1,573 வித்தியாசத்துடன் செயலில் உள்ள பாதிப்பு அதிகமாக உயர்ந்தது. இது இப்போது 7,32,835 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலை தரக்கூடிய விசியமாகும்.
ALSO READ | வெறும் 35 ரூபாயில் Covid 19 மருந்து.. . சந்தையில் அறிமுகப்படுத்தி சன் பார்மா நிறுவனம்
உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்புகளுக்கு மத்தியில், கோவிட் -19 தடுப்பூசி ( Corona Vaccine) அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக தனது முதல் தடுப்பூசியை பதிவு செய்யும் என்று ரஷ்யா துணை சுகாதார அமைச்சர் ஒலெக் கிரிட்னெவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ALSO READ | Coronavirus Updates: உயரும் கொரோனா பலி எண்ணிக்கை! குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!